பொது செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா தேர்தலுக்கான 2 தி.மு.க., வேட்பாளர்கள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முகமது ஜான், இந்தாண்டு மார்ச்சில் மறைந்தார். அதனால், காலியான எம்.பி., பதவிக்கு நடந்த தேர்தலில், தி.மு.க.,வை சேர்ந்த அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.அதேபோல, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களாக பதவி வகித்த அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் நடந்து முடிந்த சட்டபை தேர்தலில்,
 ராஜ்யசபா தேர்தலுக்கான  2 தி.மு.க., வேட்பாளர்கள்

சென்னை:அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முகமது ஜான், இந்தாண்டு மார்ச்சில் மறைந்தார். அதனால், காலியான எம்.பி., பதவிக்கு நடந்த தேர்தலில், தி.மு.க.,வை சேர்ந்த அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.அதேபோல, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களாக பதவி வகித்த அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் நடந்து முடிந்த சட்டபை தேர்தலில், எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்றனர்.எனவே, அவர்கள் வகித்த எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததால், இரு இடங்கள் காலியாகின. அந்த இரு இடங்களுக்கும், அக்., 4ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.இதன்படி, ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களாக, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியிட உள்ள னர். சட்டசபையில், தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை உள்ளதால், போட்டியின்றி இருவரும் தேர்வு செய்யப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X