பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., தர வரிசை பட்டியல்: திருப்பூர் மாணவர்கள் அசத்தல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:பொறியியல் படிப்பு தர வரிசை பட்டியலில், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மாநில அளவில், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான, 'கட்ஆப்' பட்டியல் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சீர்மரபினர் பிரிவில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர்
 இன்ஜி., தர வரிசை பட்டியல்: திருப்பூர் மாணவர்கள் அசத்தல்

திருப்பூர்:பொறியியல் படிப்பு தர வரிசை பட்டியலில், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மாநில அளவில், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான, 'கட்ஆப்' பட்டியல் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சீர்மரபினர் பிரிவில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர் பார்த்திபன், மாநில அளவில் இரண்டாமிடமும், திருமுருகன், 3ம் இடமும் பிடித்து அசத்தியுள்ளனர். இதேபள்ளியை சேர்ந்த லோகநாதன், எம்.பி.சி., - பிற பிரிவில், மாநில அளவில், 5ம் இடம் பெற்றுள்ளார்.இந்த மூவருக்கும் சென்னை அண்ணா பல்கலையில் விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படித்துக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி கூறுகையில், ''எங்கள் பள்ளி மாணவர்கள், பொறியியல் தரிவரிசை பட்டியலில் இடம்பெற்றது இதுவே முதல்முறை. கடும் போட்டி நிலவும் சூழலில் மாணவர்கள் சாதித்து, பள்ளிக்கு பெருமை சேர்ந்துள்ளனர். இது, அரசு பள்ளி மாணவர்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கும்,'' என்றார்.மாணவர் பார்த்திபன் கூறுகையில், ''தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்காக தமிழ்வழி பயிற்சி புத்தகங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வு எழுதியுள்ளேன். மருத்துவ சீட் கிடைக்காத பட்சத்தில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு செய்ய உள்ளேன்,'' என்றார்.திருமுருகன் கூறுகையில்,''எங்கள் குடும்பத்திலே படித்து பொறியியல் துறைக்கு நுழையும் முதல் தலைமுறை நான். ஊரடங்கில் குடும்ப பாரத்தை சுமக்க பனியன் கம்பெனிக்கு சென்றேன்,'' என்றார்.மாணவர் லோகநாதன் கூறுகையில், ''அம்மா பனியன் நிறுவனத்தில் டெய்லர். அப்பா இல்லை. நானும் பகுதிநேரமாக வேலைக்கு செல்வேன். பி.இ., - சி.எஸ்.இ., அல்லது பி.டெக்., - ஐ.டி., தேர்வு செய்ய உள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X