134 பேருக்கு முதல்வரின் அண்ணா பதக்கம் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

134 பேருக்கு முதல்வரின் அண்ணா பதக்கம் அறிவிப்பு

Added : செப் 15, 2021
Share
சென்னை;அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள், 134 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல் ரேகைப்பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு

சென்னை;அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள், 134 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல் ரேகைப்பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அண்ணாதுரை பிறந்த நாளான, செப்., 15ல் முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.இந்த ஆண்டு காவல் துறையில், இரண்டாம் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பேர்; தீயணைப்பு துறையில் 8 பேர்; சிறைத்துறையில் 10 பேர்; ஊர்க்காவல் படையில் 5 பேர்; விரல் ரேகை பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்.தடய அறிவியல் துறை பிரிவில் இளநிலை அறிவியல் அலுவலர் மற்றும் துணை இயக்குனருக்கு, முதல்வரின் அண்ணா பதக்கங்கள் வழங்கிட ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.மதுரையில் உள்ள சஞ்சய் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில், பல மனித உயிர்களையும், சொத்துக்களையும் காப்பாற்றிய நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி தங்கள் உயிரை தியாகம் செய்த, தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி உட்பட, ஏழு தீயணைப்பு வீரர்களுக்கு, முதல்வரின் வீரதீர செயலுக்கான, தீயணைப்பு துறை பதக்கம் மற்றும், 5 லட்சம் ரூபாய் பண வெகுமதி வழங்கப்பட உள்ளது.இப்பதக்கங்கள் அனைத்தும், முதல்வரால் பின்னர் ஒரு விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X