பல்கலை சிண்டிகேட் பிரதிநிதித்துவம்; சுயநிதி கல்லூரி சங்கம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை சிண்டிகேட் பிரதிநிதித்துவம்; சுயநிதி கல்லூரி சங்கம் வரவேற்பு

Added : செப் 15, 2021
Share
கோவை:கோவை பாரதியார் பல்கலை சிண்டிகேட் குழுவில் அரசு உதவிபெறும், தனியார் கல்லுாரிகளின் செயலர்கள் ஐந்து பேர் இணைப்பது குறித்த மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை, தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.பல்கலைகளில் துணைவேந்தருக்கு இணையான அதிகாரம் கொண்டது சிண்டிகேட் குழு. இக்குழுவில் உரிய

கோவை:கோவை பாரதியார் பல்கலை சிண்டிகேட் குழுவில் அரசு உதவிபெறும், தனியார் கல்லுாரிகளின் செயலர்கள் ஐந்து பேர் இணைப்பது குறித்த மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை, தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.பல்கலைகளில் துணைவேந்தருக்கு இணையான அதிகாரம் கொண்டது சிண்டிகேட் குழு. இக்குழுவில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்; தனியார் கல்லுாரிகளின் செயலர்கள் சேர்க்கப்படவேண்டும் என சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை சங்கம் சார்பில், பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.சிண்டிகேட் குழுவில் பிரதிநிதித்துவம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், சங்கம் தரப்பில், 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, சிண்டிகேட் குழு மறுகட்டமைப்பு செய்ய, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் அரசுக்கும் கோப்புகளை சமர்ப்பித்தனர்.பல்கலை தரப்பிலும் சிண்டிகேட், செனட் குழுக்களில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டசபையில் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, சட்டசபையில் நேற்று முன்தினம் மசோதாவை நிறைவேற்றினார். நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால், சுயநிதி கலை அறிவியல் கல்லுாரி, மேலாண்மை கல்லுாரி சங்க உறுப்பினர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X