பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவராகும் மாணவருக்கு தேவை மனோதிடம்!; தற்கொலை எண்ணம் தடுக்க கல்வியாளர்கள் அறிவுரை

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
கோவை: மருத்துவராக நினைக்கும் மாணவர்களுக்கு, மனோதிடம் அதிகமிருக்க வேண்டும். 'நீட்' தேர்வுக்கு முன்பும், பின்பும் தொடரும் தற்கொலை மரணங்களை தடுக்க வேண்டிய சமூக பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இருப்பதாக, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், 2017ம் ஆண்டு முதல், மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய நுழைவுத்தேர்வை (நீட்), மாணவர்கள் எழுதுகின்றனர்.
NEET, Students, நீட், மாணவர்கள், மனோதிடம், தற்கொலை, கல்வியாளர்கள், அறிவுரை

கோவை: மருத்துவராக நினைக்கும் மாணவர்களுக்கு, மனோதிடம் அதிகமிருக்க வேண்டும். 'நீட்' தேர்வுக்கு முன்பும், பின்பும் தொடரும் தற்கொலை மரணங்களை தடுக்க வேண்டிய சமூக பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இருப்பதாக, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், 2017ம் ஆண்டு முதல், மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய நுழைவுத்தேர்வை (நீட்), மாணவர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியானதில் இருந்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், தேர்வுக்கு முன்பும், பின்பும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. நடப்பாண்டில், நீட் தேர்வுக்கு முன், சேலம் மாவட்டம், கூழையூரை சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு எழுதிய பிறகு, கட்-ஆப் மதிப்பெண் குறைந்துவிடுமே என்ற அழுத்தத்தில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கனிமொழி, நேற்று தற்கொலை செய்து கொண்டது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


கொட்டி கிடக்குது வாய்ப்புகள்

மருத்துவ படிப்புகளில் சொற்ப இடங்களுக்கு, கடுமையான போட்டி நிலவுகிறது. பள்ளி அளவில், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். தங்களின் 25 வயது வரை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், ஒருமுறைக்கு மேல், நீட் தேர்வு எழுதியோரே, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 70 சதவீத இடங்களில் சேருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி துறையில், எக்கச்சக்க படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் கொட்டி கிடக்கின்றன. மருத்துவம் தவிர மற்ற படிப்புகளை இம்மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது, பெற்றோர், ஆசிரியர்களின் கடமை.
- ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்.


வீழ்ச்சிக்கு அல்ல கனவு!


latest tamil news


பிளஸ் 2வில், கோச்சிங் சென்டர்களில் சேர்த்து, அதிக அழுத்தம் தருவது அதிகரித்துள்ளது. பள்ளிப் படிப்பு முடித்து, முழு நேரமாக, 'நீட்' தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்கள், தங்களின் பெற்றோர் அதிகம் சிரமப்படுவதாகவும், அதிக பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் நினைத்து, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகின்றனர். இதனால் தான், ரிசல்ட் வெளியாகும் வரை, காத்திருக்க முடிவதில்லை. பெற்றோர் தான் குழந்தைகள் மத்தியில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் கவனித்து, அவர்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும், மாற்று படிப்பு குறித்து அறிமுகம் செய்து உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சிக்காக தான், கனவுகளும், லட்சியங்களும் அமைய வேண்டுமே தவிர வீழ்ச்சிக்கு அல்ல.
- அருள்வடிவு, உளவியல் ஆலோசகர்.


ஏன் இந்த அவசரம்?

மருத்துவராக நினைக்கும் மாணவர்களுக்கு, மனோதிடம் அதிகமிருக்க வேண்டும். தேர்வு எழுதுவதற்கு முன்பும், ரிசல்ட் வெளியாவதற்குள்ளும், ஏன் இந்த அவசரம், படபடப்பு என்ற கேள்வி எழுகிறது. மருத்துவ படிப்பை, சமூக பொருளாதார அங்கீகாரமாகவும், கவுரவமாகவும், படித்த பெற்றோரே நினைப்பதால், மாணவர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தத்தின் விளைவால் தான், தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. நீட் நுழைவுத்தேர்வுக்கு மட்டுமல்ல, பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் போதும், இதே மனநிலையில் மாணவர்கள் இருப்பதை காண முடிகிறது. இதை தவிர்க்க, மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது அவசியம்.
-டாக்டர் ரவீந்திரநாத், பொது செயலாளர், சமூக சமுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
15-செப்-202116:01:50 IST Report Abuse
DVRR 1) இது பூராவும் மிக கேவலாமான எதிர்மறை ஒன்றே மனதில் இருக்கும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி. ஏன்???a) நீட் சட்டத்தினால் வருவாய் இழந்தவர்கள் பிரைவேட் மருத்துவ கல்லூரி நிர்வாகம் குறைந்தது வருடத்திற்கு அவர்களுக்கு கிடைத்தது ரூ 25 கோடிக்கும் அதிகமாக. இப்போது கிடைப்பது வெறும் ரூ 1.2 கோடி அதிக பட்சம். இதில் நிர்வாகம் என்றால் அரசியல்வாதிகள் DMK ADMK MDMK .......தான் உள்ளனர் 2) (கவர்ன்மெண்ட்) மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் 60,000 எம்பிபிஎஸ் அதே ஸ்ரீ ராமச்சந்திர இன்ஸ்டிடியூட் ரூ 1.01 கோடி பீஸ் செலவு + 5.6 வருட ஹாஸ்டல் + சாப்பாடு ரூ 5 லட்சம். இப்பொழுது தற்கொலை செய்து கொள்ளும் மாணவனோ மாணவியோ அவர்கள் பின்புலம் பாருங்கள் ஒரு சாதாரண கிராமத்தில் இருக்கும் சாதாரண குடும்பம். அவர்களால் இவ்வளவு செலவு செய்து படிக்க முடியுமா???அரசு கல்லூரியில் கிடைத்தாலே மிக மிக குறைந்த செலவு ரூ 1 லட்சம் வருடத்திற்கு??இது அந்த ஏழை மாணவரால் சமாளிக்க முடியுமா அவர்கள் வருட வருமானமே சாப்பாட்டுக்கு மட்டுமே செலவழிக்கும் அவர்கள் குடும்பம் மீதி இந்த பணத்திற்க்காக என்ன செய்யும். இல்லை ஸ்காலர்ஷிப் ????இது பூரா அமௌண்ட்டுக்கு கிடைக்காது. அரசு கல்லூரியில் இடம் கிடைப்பது குதிரை கொம்பு. அப்படி கிடைக்காத பட்சத்தில் லட்சம் லட்சமாக வாரியிறைக்க ரெடியா இவர்கள் கிடையவே கிடையாது. பிறகு ஏன் இந்த கனவு ஏன் ஏக்கம் பிறகு தற்கொலை முடிவு. டாக்டர் தான் ஆகவேண்டும் என்று கனவை ஏன்????கொள்ளை கொள்ளையாக சம்பாதிக்கலாம்????அது எல்லோருக்கும் சாத்தியமல்ல??சாதாரணர்கள் வெறும் ரூ 50,000 தான் மாதத்திற்கு அதிக பட்சம் சம்பாதிக்க முடியும். இதை ஐ டி போய் பைத்தியம் மாதிரி அமரிக்க பகலில் இந்தியாவில் (இரவு) இருத்தால் சர்வ சாதாரணமாக ரூ 1 லட்சம் மாத வருமானம். செலவு செய்ய முடியும் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை செலவு செய்ய முடியாதவர்கள் தான் தற்கொலை செய்து கொண்டுக்ள்ளனர். இதை ஊதி ஊதி பெரிதாக்குவது இந்த நீட்டினால் சம்பாத்தியம் இழந்த அரசியல்வாதிகள் இல்லையென்றால் சுளையாக வருடாவருடம் கோடி கோடியாக கிடைத்து இப்போது வெறும் லட்சத்தில் தான். ஆகவே நீட் தற்கொலை ஒரு பெரிய விஷயமல்ல. 10ஆவது மார்க் குறைவு தற்கொலை, கள்ளக்காதல் தற்கொலை , என்னை மொபைலில் ரம்மி விளையாட விடவில்லை என் சகோதரன் (12 வயது) என்று சகோதரி (8 வயது) இந்த மாதிரி பல பல விஷயங்களுக்காக தற்கொலை???இதை எதுவும் இந்த அரசியல்வாதிகள், ரூ 500 குவார்ட்டர் பிரியாணி கிடைக்கும் கேடு கெட்ட இழிசனங்கள் கண்டு கொள்ளாமல் நீட் தற்கொலை ஒன்றே சொல்லிக்கொண்டு அவர்களின் கீத்தரமான் மனோநிலையை பிரதிபலிக்கின்றார்கள். டாஸ்மாக்கினாடே நீ தமிழ் நாடு ஆகவேண்டுமென்றால் விழிமின் எழுமின் புறப்படுமின். இல்லையேல் இன்னும் நாசம் அடைவீர்கள்.
Rate this:
Cancel
15-செப்-202115:05:10 IST Report Abuse
ஆரூர் ரங் Please don't repeat the same comments
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-செப்-202112:28:40 IST Report Abuse
Ramesh Sargam மருத்துவராகும் மாணவருக்கு தேவை மனோதிடம் உண்மை. மேலும் அரசியல்வாதிகளின் நீட் பற்றிய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்காதீர்கள். அவர்கள், தங்கள் சுயநலத்துக்காக நீட்டை பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி உங்களை திசை திருப்புகிறார்கள். பயமுறுத்துகிறார்கள். அவர்கள் பேச்சுக்களை நீங்கள் தவிர்த்தாலே போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X