பொது செய்தி

தமிழ்நாடு

தற்கொலை தடுக்க கவுன்சிலிங் மையம்: கோவை எஸ்.பி., அலுவலகத்தில் துவக்கம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
கோவை;தற்கொலை எண்ணம் தடுக்க, 'விடியல்' என்ற கவுன்சிலிங் மையம், கோவை எஸ்.பி., அலுவலகத்தில் துவக்கப்பட்டு, உளவியல் ஆலோசனை பெற பிரத்யேக எண் அறிமுகப்படுத்தப்பட்டது.தற்கொலையைதடுக்க, கோவை மாவட்ட போலீசார், எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறையில், 'விடியல்' என்ற கவுன்சிலிங் மையத்தை துவக்கி உள்ளனர். உளவியல் ஆலோசனை பெற, 0422-2300999 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கவுன்சிலிங்

கோவை;தற்கொலை எண்ணம் தடுக்க, 'விடியல்' என்ற கவுன்சிலிங் மையம், கோவை எஸ்.பி., அலுவலகத்தில் துவக்கப்பட்டு, உளவியல் ஆலோசனை பெற பிரத்யேக எண் அறிமுகப்படுத்தப்பட்டது.தற்கொலையைதடுக்க, கோவை மாவட்ட போலீசார், எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறையில், 'விடியல்' என்ற கவுன்சிலிங் மையத்தை துவக்கி உள்ளனர். உளவியல் ஆலோசனை பெற, 0422-2300999 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் மையத்தை துவக்கி வைத்து, எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் பதிவான, 951 இறப்பு வழக்குகளில், 480க்கும் மேற்பட்டவை தற்கொலைகள். கடந்தாண்டு பதிவான, 1,300 இறப்பு வழக்குகளில், 650 தற்கொலை வழக்குகளாக இருந்தன. நொடிப்பொழுதில் எடுக்கும் முடிவு வாழ்க்கையை மாற்றிவிடுகிறது.தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களை மீட்க கவுன்சிலிங் மையத்தை துவக்கி உள்ளோம். 24 மணி நேரமும் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இங்கு சுழற்சி முறையில், எட்டு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் இரு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 50 போலீசாருக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.போலீசார் தயாரித்த 'சைபர் க்ரைம்' விழிப்புணர்வு தொடர்பான குறும்படத்தையும் எஸ்.பி., நேற்று வெளியிட்டார். இணையதள வேலை, வங்கி பண மோசடி குறித்தும், இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X