பொது செய்தி

இந்தியா

இடம் பெயரும் பாதுகாப்பு அமைச்சகம்; பிரதமர் இல்லம் அமைய கூடுதல் இடம்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், புதிதாக அமையும் பிரதமர் இல்லத்திற்கு கூடுதல் இடம் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.டில்லியில், 'சென்ட்ரல் விஸ்டா திட்டம்' என்ற பெயரில் 'இண்டியா கேட்' அருகே ராஜ்பாதை பகுதி முழுதும் புதிய பார்லிமென்டுக்கான கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.திறப்பு விழாஜன., 26க்குள் புதிய கட்டடங்களுக்கு திறப்பு
Defence Officials, Relocate, PM Modi, Inaugurate, New Office, Sansad TV, பாதுகாப்பு அமைச்சகம், மாற்றம், பிரதமர், மோடி,

பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், புதிதாக அமையும் பிரதமர் இல்லத்திற்கு கூடுதல் இடம் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.டில்லியில், 'சென்ட்ரல் விஸ்டா திட்டம்' என்ற பெயரில் 'இண்டியா கேட்' அருகே ராஜ்பாதை பகுதி முழுதும் புதிய பார்லிமென்டுக்கான கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.


திறப்பு விழா


ஜன., 26க்குள் புதிய கட்டடங்களுக்கு திறப்பு விழா காண திட்டமிட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, இத்திட்டத்தின் மற்றொரு பகுதியாக பிரதமரின் புதிய இல்லம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தற்போது 'சவுத் பிளாக்' அருகே டல்ஹவுசி சாலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 7,000க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். இந்த அலுவலகங்கள் காலி செய்யப்பட உள்ளன.


latest tamil news


இவர்களுக்காக, கஸ்துாரிபா சாலை மற்றும் ஆப்ரிகா அவென்யூ பகுதியில் எட்டு மாடிகள் கொண்ட இரு புதிய கட்டடங்கள் உருவாகி உள்ளன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். பாதுகாப்பு அமைச்சக பணியாளர்கள் அனைவரும் இரு மாதங்களுக்குள் புதிய கட்டடங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.


புதிய இல்லம்


இந்தப் பணிகள் முடிந்த பின், தற்போது பாதுகாப்பு அமைச்சக அலுவலகங்கள் இயங்கும் சுமார் 50 ஏக்கர் நிலம் கிடைக்கும் என தெரிகிறது. இங்குதான் பிரதமருக்கான புதிய இல்லம் கட்டப்பட உள்ளது. இந்த இடம் தற்போது பிரதமர் அலுவலகம் செயல்படும் பகுதிக்கு அருகே உள்ளது. இதனால் பிரதமரின் இல்லம் மற்றும் அலுவலகம் ஆகியவை அருகருகே அமையவிருக்கிறது. இங்கு போதிய அளவில் இடம் கிடைப்பதால் கட்டடங்கள் விஸ்தாரமானதாக அமைய உள்ளன.


latest tamil news


அத்துடன் இந்த வளாகத்திலேயே மத்திய அரசின் உச்சபட்ச அதிகார அமைப்பான 'கேபினட் செக்ரட்டரியேட்' எனப்படும் அமைச்சரவை செயலக அலுவலகமும் அமைய உள்ளது. இதனால் இப்பகுதிக்கு, 'எக்ஸிகியூடிவ் என்கிளேவ்' என பெயரிப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பார்லிமென்ட் உட்பட, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் தற்போதைய பணிகள் நிறைவடைந்த பிறகே இந்த பணிகள் தொடங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.


'சன்சத் டிவி' துவக்கம்


latest tamil news


லோக்சபா, ராஜ்யசபா நிகழ்வுகளை ஒளிபரப்ப தனித்தனி 'டிவி'க்கள் இருந்தன. செலவு, நிர்வாக சிக்கல் காரணமாக அவற்றை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் பணிகள்தொடங்கின. அவை நிறைவடைந்த நிலையில், 'சன்சத் டிவி' ஒளிபரப்பை துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு இன்று துவக்கி வைக்கிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202111:23:46 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0.............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X