பொது செய்தி

இந்தியா

குரல் வாயிலாக பரிவர்த்தனை ரிசர்வ் வங்கி அனுமதி

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: தொழில்நுட்ப விஷயங்களில் அதிகளவு பரிட்சயம் இல்லாதோர், இனி குரல் வழியாகவே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.'டோன்டேக்' எனும் நிறுவனம் இத்தகைய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது. இந்நிறுவனம், கர்நாடகா மற்றும் பீஹார் மாநிலங்களில் 1,000 ரூபாய் வரையிலான பண பரிமாற்றத்தை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. தற்போது,
VoiceBased, Financial Transaction, RBI, ToneTag, Completes, Retail Payments, குரல், பரிவர்த்தனை, ரிசர்வ் வங்கி, பணம்

புதுடில்லி: தொழில்நுட்ப விஷயங்களில் அதிகளவு பரிட்சயம் இல்லாதோர், இனி குரல் வழியாகவே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

'டோன்டேக்' எனும் நிறுவனம் இத்தகைய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது. இந்நிறுவனம், கர்நாடகா மற்றும் பீஹார் மாநிலங்களில் 1,000 ரூபாய் வரையிலான பண பரிமாற்றத்தை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. தற்போது, போன்கள் வாயிலாக பண பரிமாற்றம் செய்வதற்கு, மக்களுக்கு தொழில்நுட்ப பரிட்சயம் தேவைப்படுகிறது. இதனால் பலர், செயலி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுத்த அஞ்சுகின்றனர்.


latest tamil news


இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில், 'பியூச்சர் மற்றும் ஸ்மார்ட் போன்'களில் குரல் வழியாகவே இனி பண பரிவர்த்தனை சேவையை வழங்கும் வசதியை டோன்டேக் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து, வங்கிகள் உள்ளிட்டவை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை எளிதாக வழங்க முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
15-செப்-202116:22:53 IST Report Abuse
DVRR இப்போ உடனே ஹாக்கர்ஸ் யார் குரலில் பேசவேண்டுமோ தயார் ஆகிவிடுவார்கள் சிவாஜியா எம் ஜி ஆற எல்லா குரலிலும் இதை பற்றி இன்னும் சில நாட்களில் செய்தியில் வாட்ஸாப்பில் பல திடுக்கிடும் செய்திகள் காணலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X