ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு; 18 மாணவர்கள் முதலிடம்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி: பொறியியல் நுழைத்தேர்வான ஜே.இ.இ., மெயின் நுழைவுத்தேர்வுக்கான 4ம் கட்ட தேர்வின் முடிவுகள் வெளியானது. இதில், 18 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.பொறியியல் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., மெயின் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும். முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜே.இ.இ., மெயின் 2021 தேர்வு நடைபெறுவது வழக்கம். ஒரே மாணவர் 4
JEE_Main, Results, 18 Students, Rank1, ஜேஇஇ, மெயின், தேர்வு, முடிவுகள், வெளியீடு

புதுடில்லி: பொறியியல் நுழைத்தேர்வான ஜே.இ.இ., மெயின் நுழைவுத்தேர்வுக்கான 4ம் கட்ட தேர்வின் முடிவுகள் வெளியானது. இதில், 18 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

பொறியியல் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., மெயின் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும். முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜே.இ.இ., மெயின் 2021 தேர்வு நடைபெறுவது வழக்கம். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும். இதற்கிடையே இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாகக் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜே.இ.இ., மெயின் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரலில் நடக்க இருந்த தேர்வு, ஜூலை 20 முதல் 25 வரை நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியானது.


latest tamil news


தற்போது, ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் நடந்த 4ம் கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும் 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து 4 பேர், ராஜஸ்தானில் இருந்து 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202115:02:46 IST Report Abuse
ஆரூர் ரங் மத்தியபிரதேச 19 வயது மாணவி CHARTERED ACCOUNTANT👍 பட்டையக் கணக்காளர் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார். அவரது 21 வயது அண்ணன் 18 வது இடம்✋✋ பெற்றுள்ளார்( 😉பிராமணர்களல்ல). நம்மூர் பிள்ளைகள் சாதாரண நீட்டுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். யார் முன்னேறிய மாநிலம் ? இனிமே பீடா வாயன்ன்னு அவங்களை திட்டாதீர்கள். சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
15-செப்-202114:37:28 IST Report Abuse
Rengaraj உயர் கல்வியின் தரம் உயரவேண்டும் என்றால் தரத்துக்கு தக்கவாறு கடும் போட்டியையும் ஏற்படுத்தவேண்டும். வினாத்தாள் கடினம், எளிது என்ற விஷயத்துக்குள் மாணவர்கள் கல்வியாளர்கள், பெற்றோர்கள் இவர்களை தவிர அரசியல்வாதிகள் செல்லக்கூடாது. கல்வியை அரசியலாக்க கூடாது. தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு ஒரு அரசியல் விளையாட்டை கல்வியில் நடத்த மாட்டார்கள். இந்த விஷயத்தில் கடைசியில் ஏமாந்து போவது மாணவர்களும் சராசரி நிலையில் உள்ள மக்களும்தான்.
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
15-செப்-202113:37:08 IST Report Abuse
Narasimhan குமரேசா தமிழ்நாட்டுலேந்து ஒரு பேரையும் காணும். நம்மளையும் மக்குன்னு தண்டோரா போட்டுடபோறானுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X