பொது செய்தி

தமிழ்நாடு

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்; வேட்புமனுத்தாக்கல் இன்று துவக்கம்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (செப்.,15) துவங்கியது.தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அக்., 6, 9ல், இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த
Tamilnadu, Local Body Election, Nomination, தமிழகம், உள்ளாட்சி தேர்தல், வேட்புமனு, துவக்கம்

சென்னை: தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (செப்.,15) துவங்கியது.

தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அக்., 6, 9ல், இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை கடந்த 13ம் தேதி மாலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, இம்மாவட்டங்களில் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று (செப்.,15) துவங்கியது. அலுவல் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். செப்.,22 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிக்கான மனுத்தாக்கல் ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான மனுத்தாக்கல், சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் நடக்க உள்ளது. இதற்காக, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஒன்பது மாவட்டங்களுக்கும், தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X