நிர்வாணமாக சுற்றித்திரிந்த இளம்பெண் மீட்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிர்வாணமாக சுற்றித்திரிந்த இளம்பெண் மீட்பு

Added : செப் 15, 2021
Share
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் புறவழிச்சாலை, சந்தனகிரி பிரிவு பகுதியில், நள்ளிரவில் இளம்பெண் ஆடைகள் எதுவுமில்லாமல் நிர்வாண நிலையில் சுற்றித் திரிவதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அதன்பேரில், ஆத்தூர் டவுன் எஸ்.ஐ., மூர்த்தி தலைமையிலான போலீசார், அந்தப் பெண்ணை மீட்கும் போது, அவர், மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், கடலூர் மாவட்டம்,

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் புறவழிச்சாலை, சந்தனகிரி பிரிவு பகுதியில், நள்ளிரவில் இளம்பெண் ஆடைகள் எதுவுமில்லாமல் நிர்வாண நிலையில் சுற்றித் திரிவதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், ஆத்தூர் டவுன் எஸ்.ஐ., மூர்த்தி தலைமையிலான போலீசார், அந்தப் பெண்ணை மீட்கும் போது, அவர், மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் பிரியா, 23, என்பதும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், மதுபோதைக்கு அடிமையான இவர் பல நேரங்களில் வீட்டை விட்டு வெளியேறி இது போன்ற செயலில் அடிக்கடி ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X