பொது செய்தி

தமிழ்நாடு

அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்துக்கு மாற்றம் : கீழடி ஆய்வறிக்கை விரைவில் வெளியாக வாய்ப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை : மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், மீண்டும் தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.மத்திய தொல்லியல் துறையின், பெங்களூரு அகழாய்வு வட்டார கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவர், 2014 - 15ம் ஆண்டுகளில், மதுரைக்கு அருகில் உள்ள வைகை நதிக்கரையில், நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தொல்லியல் தடயங்கள் குறித்து ஆய்வு

சென்னை : மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், மீண்டும் தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மத்திய தொல்லியல் துறையின், பெங்களூரு அகழாய்வு வட்டார கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவர், 2014 - 15ம் ஆண்டுகளில், மதுரைக்கு அருகில் உள்ள வைகை நதிக்கரையில், நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தொல்லியல் தடயங்கள் குறித்து ஆய்வு செய்தார்.பின், சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வை மேற்கொண்டார். அதில், சங்ககாலத்தைச் சேர்ந்த கட்டடம், நெசவுத் தொழிலுக்கான உலை, உறை கிணறு, காசு உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.அதிக பரப்பளவில், சங்க கால வாழ்விடப்பகுதி வெளிப்பட்டது, இந்திய ஆய்வாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், அடுத்தகட்ட அகழாய்வும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இவர் அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின், ஸ்ரீராமன் என்ற ஆய்வாளர், கீழடியில் ஆய்வு செய்து, குறிப்பிடும்படியான தொல்பொருட்கள் கிடைக்கவில்லை என்று மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அளித்தார். இதனால், கீழடி அகழாய்வை மத்திய தொல்லியல் துறை கைவிட்டது.இதையடுத்து, தொல்பொருட்கள் பெங்களூரு எடுத்துச் செல்லப்பட்டன. இதை ஆய்வாளர்கள் போராடி தடுத்தனர். மேலும், அமர்நாத்தை மீண்டும் தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், அகழாய்வு அறிக்கையை துரிதமாக வெளியிட இது உதவும் என்றும், பலகட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால், அவர் கோவாவுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது, மத்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டார ஆலய ஆய்வுப் பிரிவுக்கு கண்காணிப்பாளராக, அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார். அவர் அடுத்த வாரம், சென்னை வர உள்ளார். இதனால், கீழடி அகழாய்வு அறிக்கை விரைவில் வெளிவரும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.அமர்நாத் ராமகிருஷ்ணன் மட்டுமின்றி, மேலும், 12 பேருக்கு, மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அஜய்யாதவ், இட மாறுதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X