பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி துறையில் உற்பத்தி ஊக்கத் தொகை திட்டம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை : ''ஜவுளி துறையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதால், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், நேர்மறையான மாற்றம் ஏற்படும்,'' என, மத்திய ஜவுளி துறையின் கூடுதல் செயலர் விஜய்குமார் சிங் தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி:ஜவுளித் துறையில், உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல்


சென்னை : ''ஜவுளி துறையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதால், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், நேர்மறையான மாற்றம் ஏற்படும்,'' என, மத்திய ஜவுளி துறையின் கூடுதல் செயலர் விஜய்குமார் சிங் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
ஜவுளித் துறையில், உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதால், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களில், நேர்மறையான மாற்றம் ஏற்படும். மத்திய அரசின், 10 ஆயிரத்து, 683 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் கீழ், செயற்கை நுாலிழை ஆயத்த ஆடைகள், செயற்கை நுாலிழை துணிகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளியில், 10 பொருட்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

ஜவுளித் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைத் திட்டம் வாயிலாக, நாட்டில் உயர் மதிப்புடைய செயற்கை நுாலிழை துணிகள், ஆடைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். உற்பத்தி சார்ந்த திட்டம் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில், 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான புதிய முதலீடுகளை பெற முடியும்; 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான, புதிய உற்பத்தி ஏற்படும்; கூடுதலாக, 7.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு விஜய்குமார் சிங் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X