பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்பெயின் சென்ற இன்பன் உதயநிதி: விமான நிலையம் வந்து வழியனுப்பிய முதல்வர்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (102)
Share
Advertisement
சென்னை: இந்தியாவின் ஐ-லீக் கால்பந்தாட்ட குழுவில், நெரோகா எனப்படும் மணிப்பூர் அணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் ஸ்டாலினின் பேரன் இன்பன் உதயநிதி, போட்டிகளில் பங்கேற்க நேற்று (செப்., 14) அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் புறப்பட்டார். அவரை முதல்வர் நேரில் வழியனுப்பி வைத்தார்.சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலினின் மகனும், முதல்வரின் பேரனுமான இன்பன் உதயநிதி
இன்பன் உதயநிதி, ஸ்பெயின், முதல்வர், Inban Udhayanidhi,

சென்னை: இந்தியாவின் ஐ-லீக் கால்பந்தாட்ட குழுவில், நெரோகா எனப்படும் மணிப்பூர் அணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் ஸ்டாலினின் பேரன் இன்பன் உதயநிதி, போட்டிகளில் பங்கேற்க நேற்று (செப்., 14) அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் புறப்பட்டார். அவரை முதல்வர் நேரில் வழியனுப்பி வைத்தார்.

சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலினின் மகனும், முதல்வரின் பேரனுமான இன்பன் உதயநிதி சென்னையில் உள்ள “மேக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில்” சேர்ந்து கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த அகாடமி புனே, மணிப்பூர் உள்ளிட்ட கால்பந்தாட்ட சங்கங்களின் கீழ் இணைப்பு பெற்றது. அதன் மூலம் இன்பநிதி மணிப்பூரின் நெரோகா அணியில் தேர்வானார். எதிரணியை கோல் அடிக்கவிடாமல் தடுத்து ஆடுபவர் இன்பன் என அந்த அணி தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அணியில் உள்ள மிக இளம் வயது வீரர் இவர்.


latest tamil news



இந்நிலையில், நெரோகா அணி ஸ்பெயினில் நடக்கின்ற கால்பந்து போட்டியில் பங்கேற்கிறது. அதற்காக இன்பன் உதயநிதி நேற்று அதிகாலை ஸ்பெயின் புறப்பட்டார். அவரை உதயநிதி, கிருத்திகா உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் விமான நிலையம் வந்து நேரில் வழியனுப்பி வைத்தனர். அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும் உடன் இருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
17-செப்-202105:38:04 IST Report Abuse
Natesan Narayanan நீயாவது தாத்தா கொளுத் தாத்தா மாதிரி ஆரசியலில் ஆதாயம் தேடாமல். கால் பந்தில் கிருட்டினானோ ரொனால்டோ மாதரி வர வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-செப்-202108:29:14 IST Report Abuse
Sampath Kumar நீட்டு தேர்வுக்கு தற்கொலை செய்யாதீர்கள்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
16-செப்-202108:13:04 IST Report Abuse
RajanRajan கோல்கள் பல அடித்து அந்த உயிக்காட்டு சாமி அருளாலே திருக்குவளை மன்னன் தாத்தா பெயரை காப்பாத்தோணும்பா. வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X