சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.11 லட்சம் நுாதன மோசடி: நடிகை ஜெயலட்சுமி புகார்

Added : செப் 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : தன்னிடம், 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.சென்னை, பாடி தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கீதா. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அளித்த புகார்:நானும், எங்கள் பகுதியில் உள்ள பெண்களும் இணைந்து, 'வெள்ளை செம்பருத்தி' என்ற சுய உதவி
 ரூ.11 லட்சம் நுாதன மோசடி: நடிகை ஜெயலட்சுமி புகார்


சென்னை : தன்னிடம், 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, பாடி தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கீதா. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அளித்த புகார்:நானும், எங்கள் பகுதியில் உள்ள பெண்களும் இணைந்து, 'வெள்ளை செம்பருத்தி' என்ற சுய உதவி குழுவை நடத்தி வருகிறோம். எங்கள் குழுவில் உள்ள பெண்களுக்கு, நடிகையும், பா.ஜ., பிரமுகருமான ஜெயலட்சுமி, 1 லட்சம் ரூபாய்க்கு வட்டியாக, 10 ஆயிரம் ரூபாய் பிடித்தம் போக, 90 ஆயிரம் ரூபாயை எங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.இந்த பணத்தை மாத தவணையாக செலுத்திவிட்டோம். ஆனால் அவர், 'நீங்கள் வட்டி தான் கொடுத்துள்ளீர்கள்; அசலுடன் சேர்த்து கூடுதல் வட்டி தர வேண்டும்' என, மிரட்டுகிறார்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசிக்கும் நடிகை ஜெயலட்சுமி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:

சென்னை, பாடி, தெற்கு மாட வீதியைச் சேர்ந்த கீதா என்பவர், 2019ல் எனக்கு அறிமுகமானார். 'கொரோனா பரவல் காரணமாக, வேலைக்கு செல்ல முடியாமல், எங்கள் குழுவில் உள்ளவர்கள் வறுமையில் வாடுகின்றனர். பிள்ளைகளின் கல்லுாரி கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு பண உதவி செய்ய வேண்டும்' என, கேட்டார்.

நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். செலவுகளை குறைத்து, சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து சம்பாதித்த பணத்தை சேமித்து, அதில் இருந்து உதவி செய்ய முடிவு செய்தேன்.கீதா என் வீட்டிற்கு அழைத்து வந்த பெண்களின் வங்கி கணக்கு மற்றும் கூகுள் பே வாயிலாக, 17.50 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பினேன்.'ஆறு மாதத்திற்குள் திருப்பி தந்துவிட வேண்டும். அதற்கு வட்டி ஏதும் இல்லை' என, கீதா அழைத்து வந்த பெண்களிடமும் தெரிவித்தேன்.

ஆனால், கீதா நான் பணம் கொடுத்த பெண்களிடம் இருந்து, 11 லட்சம் ரூபாயை வாங்கி, நுாதனமாக மோசடி செய்துவிட்டார். அந்த பணத்தை கேட்டால் மிரட்டுகிறார். அவர் மீதும், உடந்தையாக இருக்கும் நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இருதரப்பு புகார் மீதும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
16-செப்-202105:58:04 IST Report Abuse
Raman அவங்க நடிகை மட்டும் அல்ல.. பாஜகவில் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளார்கள். பத்து வட்டிக்கு பணம் பெறுகிறார்கள்.. ஹி ஹி ஹி
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20-செப்-202105:13:59 IST Report Abuse
meenakshisundaramஇதில் கட்சி எங்கே இருந்து வந்தது ?அப்போ வாங்கினவங்க 'திமுக 'வா ?அவங்க எந்த கட்சின்னு தெரிந்து எழுதலாமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X