சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1 கி.மீ., துாரத்திற்கு

Added : செப் 15, 2021
Share
Advertisement
வந்தவாசி : வந்தவாசி அருகே, ஒரு கி.மீ., துாரத்திற்கு மின்கம்பத்தில் உள்ள கம்பிகள் திருட்டு போனது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்தில் உள்ள மின்மாற்றி மூலம், விழுதுபட்டு கிராமத்திற்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு, விழுதுபட்டு கிராமத்தில் வயல்வெளிகளில், ஒரு கி.மீ., துாரத்திற்கு மின்கம்பங்களில் உள்ள மின் கம்பியை, ஒரு

வந்தவாசி : வந்தவாசி அருகே, ஒரு கி.மீ., துாரத்திற்கு மின்கம்பத்தில் உள்ள கம்பிகள் திருட்டு போனது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்தில் உள்ள மின்மாற்றி மூலம், விழுதுபட்டு கிராமத்திற்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு, விழுதுபட்டு கிராமத்தில் வயல்வெளிகளில், ஒரு கி.மீ., துாரத்திற்கு மின்கம்பங்களில் உள்ள மின் கம்பியை, ஒரு கும்பல் திருடி சென்றது.இது குறித்து அப்பகுதி மக்கள், போலீசாருக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, மின்வாரிய பொறியாளர் ஆய்வு செய்து, மின்கம்பி திருட்டு குறித்து, கீழ்கொடுங்காலுார் போலீசில் புகார் செய்தார். மின்கம்பி திருட்டால், அப்பகுதியில் மின்சார தடை ஏற்பட்டு, விவசாயிகள் பம்பு செட்டு இயக்க முடியாமல் திணறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X