அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

Added : செப் 15, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.அக்டோபர் 6, 9 தேதிகளில் தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற
DMDK, Local Body Election, Vijayakant, Alone, தேமுதிக, தனித்து போட்டி, உள்ளாட்சி தேர்தல், விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அக்டோபர் 6, 9 தேதிகளில் தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை நாளை (செப்.,16), நாளை மறுநாள் (செப்.,17) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணியளவில் அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.


latest tamil news


பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதற்கு கட்சியின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.4 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பகுதிக்கு ரூ.2 ஆயிரமும் விருப்ப மனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
16-செப்-202100:17:05 IST Report Abuse
Aarkay அண்ணியையும் சுதீஷையும் ஓரம் காட்டினால், கட்சி உருப்படும். யாருமே சுதீஷிற்காகவோ, அண்ணிக்காகவோ வோட்டு போடப்போவதில்லை.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
15-செப்-202119:17:32 IST Report Abuse
Mohan ஆரம்பம் எப்போதும் இப்படித்தான் நல்லாருக்கு. ஆனா பினிசிங்ல கோட்ட விடுறீங்களே,கேப்.
Rate this:
Cancel
Rajasekaran Ayyavoo - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-செப்-202119:03:12 IST Report Abuse
Rajasekaran Ayyavoo Singam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X