கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாகனங்களின் வேகத்தை அதிகரித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை : நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை, மணிக்கு 100 கிலோ மீட்டராக அதிகரித்து, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.கடந்த 2013ல், காஞ்சிபுரத்தில் நடந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் டாக்டருக்கு 90 சதவீத ஊனம் ஏற்பட்டது. அவருக்கு 18.43 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த,



சென்னை : நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை, மணிக்கு 100 கிலோ மீட்டராக அதிகரித்து, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2013ல், காஞ்சிபுரத்தில் நடந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் டாக்டருக்கு 90 சதவீத ஊனம் ஏற்பட்டது. அவருக்கு 18.43 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு 1.49 கோடி ரூபாயாக இழப்பீட்டை உயர்த்தியது.மேலும், தேசிய நெடுஞ்சாலையில் 100 கி.மீ., எக்ஸ்பிரஸ் சாலைகளில் 120 கி.மீ., வேகத்தில் செல்லலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யவும், இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியின் போது, வேகக்கட்டுப்பாடு கருவியும் பொருத்தும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிட்டது. உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை, உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

வாகன வேகத்தை குறைப்பது குறித்து, மறுபரிசீலனை செய்யக்கோரிய உத்தரவை தவிர்த்து, மற்ற உத்தரவுகள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இயந்திர தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சாலை உள்கட்டமைப்பு வசதிகளால், வாகனங்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வசதிகள் இருந்தாலும், சாலை விதிகளை பின்பற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
சாலை விபத்துக்கள், மரணங்கள், வாகனங்களின் அதிவேகத்தால் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்கு, பெரும்பாலும் அதிக வேகம் தான் காரணம். கட்டுப்பாடற்ற வேகத்துக்கு, இயந்திர தொழில்நுட்பமும் காரணம்; அதனால், நிறைய விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, வாகனங்களின் வேகத்தை அதிகரித்து, மத்திய அரசு 2018 ஏப்ரலில் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

2014 ல் பிறப்பித்த உத்தரவின்படி, வேகத்தை குறைக்க வேண்டும்.ஒன்பது இருக்கைக்கு மேல் உள்ள வாகனங்கள், மணிக்கு 80 கி.மீ., ஓட்டுனர் மற்றும் எட்டு பயணிகளுக்கான இருக்கைகளுடன் கூடிய வாகனங்கள் 100 கி.மீ., சரக்கு வாகனங்கள் 80 கி.மீ., மூன்று சக்கர வாகனங்கள் 60 கி.மீ., இரு சக்கர மோட்டார் வாகனங்கள் 80 கி.மீ., அதிகபட்ச வேகமாக இருக்க வேண்டும்.மாநில அரசும் 2014 உத்தரவின்படி, வேக கட்டுப்பாடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X