பொது செய்தி

தமிழ்நாடு

துவக்க, நடுநிலைப்பள்ளி திறப்பு செப்.,30ல் முடிவு: அமைச்சர்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் துவக்க, நடுநிலைப்பள்ளிகள் திறப்பு குறித்து செப்.,30ம் தேதி முடிவு செய்யப்படும்,'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: பள்ளிகளில் மாணவர்கள் வருகை உட்பட பல்வேறு நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம். இதுகுறித்த அறிக்கையை முதல்வரிடம்
PRIMARY SCHOOL, OPEN, SEP30, MINISTER, துவக்கப்பள்ளி, திறப்பு, செப்30, முடிவு, அமைச்சர்

சென்னை: ‛‛தமிழகத்தில் துவக்க, நடுநிலைப்பள்ளிகள் திறப்பு குறித்து செப்.,30ம் தேதி முடிவு செய்யப்படும்,'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: பள்ளிகளில் மாணவர்கள் வருகை உட்பட பல்வேறு நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம். இதுகுறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம். கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.


latest tamil news


தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் கேரளாவை ஒட்டிஉள்ளன. கேரளாவில் தொற்று அதிகம் இருப்பதால் அங்குள்ள பள்ளிகளை திறப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர் மற்றும் திருச்சி, வேலூர் போன்ற பகுதிகளிலும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

ஒரு சாரார் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறக்கலாம் என்றும், ஒருசாரார் 5 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து செப்.,30ம் தேதி முடிவெடுத்து முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
15-செப்-202119:09:37 IST Report Abuse
Mohan "அமைச்சர்'- சிரிப்பு சிரிப்பா வருது.
Rate this:
Cancel
லீனு - Hyderabad,இந்தியா
15-செப்-202118:09:26 IST Report Abuse
லீனு பரப்பு பரப்பு, ஆயிரக்கணக்கில் மக்களை காட்டுக்கு அனுப்பிட்டு தானா அடங்குறப்போ நம்ம அரசு கட்டுக்கு கொண்டு வந்துடுச்சுன்னு மீடியாவுல சொல்லி பரப்பிக்கலாம்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
15-செப்-202117:15:26 IST Report Abuse
J. G. Muthuraj தம்பி ஒரு நல்ல அமைச்சர்....ஊடகங்கள் முன்னால் ஒரே 'ஸ்டாண்டார்டு' மெஸேஜ் எப்போதும்....பள்ளிகள் திறக்கப்போகிறோம் என்பார்....ஒரிரு தேதிகளை குறிப்பிடுவார்.....கடைசியில் மாண்புமிகு முதலைச்சர் தீர்மானத்தின்படி இது செய்யப்படும் என்பார்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X