சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தொழிலாளி கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி இருவர் கைது

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஆத்தூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை தாலுக்கா, எருக்கம்பட்டு மலை கிராமத்தை சேர்ந்த ராஜா, 32. இவர், வாழப்பாடியில் உள்ள விவசாய கிணற்றில் இறந்துகிடந்தார். விசாரணையில் செம்மரக் கடத்தல் விவகாரத்தில் இவரை கடத்தி வந்து அவரது குடும்பத்தினரிடம் ஆறு லட்ச ரூபாய் பணம் கேட்டு தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அக்கும்பலிடம் தப்பிச் சென்ற தொழிலாளி ராஜா

ஆத்தூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை தாலுக்கா, எருக்கம்பட்டு மலை கிராமத்தை சேர்ந்த ராஜா, 32. இவர், வாழப்பாடியில் உள்ள விவசாய கிணற்றில் இறந்துகிடந்தார்.
விசாரணையில் செம்மரக் கடத்தல் விவகாரத்தில் இவரை கடத்தி வந்து அவரது குடும்பத்தினரிடம் ஆறு லட்ச ரூபாய் பணம் கேட்டு தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அக்கும்பலிடம் தப்பிச் சென்ற தொழிலாளி ராஜா கிணற்றில் இருந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வாழப்பாடி போலீசார் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து, செம்மரக்கடத்தல் ஏஜென்ட் ஆத்தூர் அடுத்த, கருமந்துறை கும்பலைச் சேர்ந்த தர்மராஜ் 45, ஏரிவளவு பகுதியைச் சேர்ந்த செல்வம், 45, எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சீனிவாசன், கணேசன் உள்பட ஏழு பேரிடம் விசாரணை நடத்தினர்.
நேற்று, கார் டிரைவர் கார்த்திக், திலீப், ஜீவா ஆகிய மூவரை கைதுசெய்தனர். முக்கிய குற்றவாளியான தர்மராஜ், செல்வம் ஆகியோரை, இன்று, வாழப்பாடி போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X