அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா அலை; அலட்சியம் வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: 'அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கோவிட் அலை விரைவாக உச்சம் தொடும்; கவனக்குறைவாக இருக்க வேண்டாம்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கோவிட் அலை முடிவடைந்திருப்பது
US, Delta Varient, Peak Soon, Covid Wave, Coronavirus Wave, Covid Critical Care, அமெரிக்கா, கோவிட் பாதிப்பு, டெல்டா அலை, நிபுணர்கள், எச்சரிக்கை

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கோவிட் அலை விரைவாக உச்சம் தொடும்; கவனக்குறைவாக இருக்க வேண்டாம்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கோவிட் அலை முடிவடைந்திருப்பது சற்று நிம்மதியை அளிக்கிறது. ஆனால் தற்போது இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் ஒரே மாதிரியான கோவிட் தொற்று நிலை தொடர்வதை காண முடிகிறது.


latest tamil news


அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 13ம் தேதி வரையிலான ஏழு நாட்களில், பாதிப்பு 1.72 லட்சமாக பதிவாகியுள்ளது; தினமும் 1,800 பேர் உயிரிழந்து வருகின்றனர். தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கோவிட் அலை விரைவாக உச்சம் தொடும். மக்கள் கவனக்குறைவாகவோ அலட்சியமாகவோ இருக்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
15-செப்-202121:39:52 IST Report Abuse
Kalyan Singapore இந்தியாவில் Delta Virus பரவிய பொழுது நாடு முழுக்க கடை அடைக்க யோசனை கூறிய அந்தோணி தற்போது என் அதே யோசனையை அமெரிக்காவுக்கு சொல்ல மாட்டேன் என்கிறார் ? தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தானே தெரியும் ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-செப்-202121:19:28 IST Report Abuse
Ramesh Sargam இந்த நிலைமைக்கு காரணமே அங்குள்ள மக்களின் அலட்சிய போக்கு. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றால், அதை கூற நீ யார், என் சுதந்திரத்தில் தலையிடாதே என்று சண்டைக்கு வருவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X