பாணாவரம் அருகே சிக்கன் கடைக்காரர் கொலையில் 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாணாவரம் அருகே சிக்கன் கடைக்காரர் கொலையில் 4 பேர் கைது

Added : செப் 15, 2021
Share
பாணாவரம்: பாணாவரம் அருகே, சிக்கன் கடைக்காரரை கட்டையால் தாக்கிக் கொலை செய்த வழக்கில், நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே தப்பூர் கோவிந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 45. சிக்கன் கடை வைத்திருந்தார். இவர் மனைவி கங்கா, 35. இவர்களுக்கு நான்கு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 75.

பாணாவரம்: பாணாவரம் அருகே, சிக்கன் கடைக்காரரை கட்டையால் தாக்கிக் கொலை செய்த வழக்கில், நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே தப்பூர் கோவிந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 45. சிக்கன் கடை வைத்திருந்தார். இவர் மனைவி கங்கா, 35. இவர்களுக்கு நான்கு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 75. விவசாயி. இவர் மனைவி கிருஷ்ணவேணி, 65, மகன்கள் உமஷ், 35, அன்பு, 32. இவர்கள் அங்கு டிபன் கடை நடத்தி வருகின்றனர். ரங்கநாதன், கிருஷ்ணன் ஆகியோருக்கு நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்தது. இதற்காக அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தன.

இந்நிலையில் நேற்று இரவு 8:00 மணிக்கு மீண்டும் மோதல் நடந்தது. இதில், கிருஷ்ணன் குடும்பத்தினர் கட்டையால் தாக்கியதில் ரங்கநாதன் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தார். பாணாவரம் போலீசார், கிருஷ்ணன், மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள் உமஷ், அன்பு ஆகியோரை இன்று கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X