கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கலாம்'

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை: மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல தடை கோரி திருநெல்வேலியை சேர்ந்த அப்துல்
Schools, Students, Forced, Govt, Take Action, Madurai Branch, HC, மதுரை, உயர்நீதிமன்றம், கிளை, மாணவர்கள், பள்ளிகள், நேரடி வகுப்பு, கட்டாயம், நடவடிக்கை

மதுரை: மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல தடை கோரி திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‛60க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா நோய்த் தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம். மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்,' எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து அரசு முதன்மை செயலர், பள்ளி கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
15-செப்-202116:18:51 IST Report Abuse
DVRR மொதல்லே உன் வேலையை நீ முதலில் பார் அநீதிமன்றமே 4.06 கோடி வழக்குகள் உங்களது அநீதிமன்றங்களில் அதை முதலில் Clear செய்யுங்கள் பிறகு மற்றவர்களை பற்றி கவலைப்படலாம் . உனது வீட்டை சுத்தம் செய் பிறகு சொல் அடுத்த வீட்டில் இருப்பவன் என்ன செய்ய வேண்டுமென்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X