பொது செய்தி

இந்தியா

ஆட்டோமொபைல் துறைக்கு ரூ.26,000 கோடியில் ஊக்கத்திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ஆட்டோமொபைல் துறையில் மின் மற்றும் ஹைட்ரஜன் எரிவாயு வாகனங்களின் உற்பத்தியை பெருக்க ரூ.26,000 கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், 7.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு, ரூ.57,043 கோடி மதிப்பில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறைக்கு
AUTOMOBILE, 26000 CRORE, SCHEME, CENTRAL, GOVT, ஆட்டோமொபைல், ரூ.26,000 கோடி, ஊக்கத்திட்டம், மத்திய அரசு, ஒப்புதல்

புதுடில்லி: ஆட்டோமொபைல் துறையில் மின் மற்றும் ஹைட்ரஜன் எரிவாயு வாகனங்களின் உற்பத்தியை பெருக்க ரூ.26,000 கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், 7.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, ரூ.57,043 கோடி மதிப்பில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறைக்கு ஐந்தாண்டுகால திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், மின் வாகனங்கள், ஹைட்ரஜன் எரிவாயு வாகனங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துவதற்காக திட்டத்தின் மதிப்பு ரூ.25,938 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



மின்னணு ஆற்றல் திசைமாற்றி அமைப்பு, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அசெம்பிளி, சென்சார்கள், சன்ரூப்ஸ், சூப்பர் கேபாசிட்டர்கள், தகவமைப்பு முன் விளக்கு, சக்கர அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு, தானியங்கி பிரேக்கிங், மோதல் எச்சரிக்கை அமைப்பு ஆகிய உதிரி பாகங்கள் இத்திட்டத்தின் கீழ் வரவுள்ளது.

2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 13 துறைகளுக்கு மொத்தமாக ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாகவே, தற்போது ஆட்டோமொபைல் துறைக்கு ஊக்கத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202122:21:07 IST Report Abuse
அப்புசாமி நாலு செங்கல் வெச்சு அடிக்கல் நாட்டி 26000 கோடி தர்ரோம்னு...
Rate this:
Cancel
selva - Chennai,இந்தியா
15-செப்-202119:33:32 IST Report Abuse
selva ஐயோ ஐயோ இன்னுமா
Rate this:
Cancel
Ramakrishnan R - kalpakkam,இந்தியா
15-செப்-202118:39:57 IST Report Abuse
Ramakrishnan R சீனாவின் ஆட்டோமொபைல் தொழில்சாலைகளுடன் போட்டி இட்டு வெற்றிகரமாக முன்னேறி வரும் நமது இந்திய நிறுவனங்களுக்கு, இது போன்ற ஊக்கம் மிக அவசியம். மத்திய அரசுக்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X