2 வாரங்களுக்குள் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகள் நியமனம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛நாடு முழுவதும் காலியாக உள்ள தீர்ப்பாயங்களுக்கு 2 வாரங்களுக்குள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும்,'' என, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.நாடு முழுவதும் தீர்ப்பாயங்கள், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் 250க்கும் மேற்பட்ட நீதிபதி காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் எனக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு
தீர்ப்பாயங்கள், உச்சநீதிமன்றம், மத்திய அரசு

புதுடில்லி: ‛‛நாடு முழுவதும் காலியாக உள்ள தீர்ப்பாயங்களுக்கு 2 வாரங்களுக்குள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும்,'' என, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் தீர்ப்பாயங்கள், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் 250க்கும் மேற்பட்ட நீதிபதி காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் எனக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கு கடந்த வாரம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தீர்ப்பாயங்களில் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை நிரப்பாமல் அவற்றை பயனற்றதாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதில்லை என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது: நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மனுதாரர்கள் மிகவும் பரிதாபத்திற்கு உரிய வகையில் வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வழக்குகள் மாதக்கணக்கில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. தீர்ப்பாயங்களின் தலைமை பதவிக்கு நியமிக்க தேர்வுக்குழு பெயர்களை பரிந்துரை செய்தால், அதில் சிறந்தவர்களை தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் மத்திய அரசு தேர்வு செய்துவிட்டு மற்றவர்களை காத்திருப்பில் வைத்துள்ளது. சட்டத்துறையில் தேர்வுக்குழு பட்டியலை புறக்கணிக்கவும் காத்திருப்பில் வைக்கவும் முடியாது. எந்த அடிப்படையில் மத்திய அரசு நியமிக்கிறது.


latest tamil news
உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு நாடு முழுவதும் நேர்காணல் நடத்தி தீர்ப்பாயங்களுக்கு தலைமை பதவிக்கு ஆட்களை தேர்வு செய்து பட்டியலிட்டும் அதை நிரப்பாமல் மத்திய அரசு இருக்கிறது. அடுத்த 2 வாரங்களுக்குள் நாடு முழுவதும் காலியாக இருக்கும் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால், உச்சநீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
15-செப்-202119:35:15 IST Report Abuse
Ramanujam Veraswamy All concerned - Govt and Judiciary shall work in tantrum to fill vacant posts in Tribunals and High Courts, as ping cases are mounting day after day.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
15-செப்-202117:57:57 IST Report Abuse
GMM தீர்ப்பாயத்தில் தலைமை பதவிக்கு (உச்ச நீதிமன்றம் ) பரிந்துரை. பரிந்துரையை மத்திய அரசு அப்படியே ஏற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இருக்கக்கூடாது. ஒருவர் பற்றி பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து விவரங்கள் அரசிடம் தான் இருக்கும். நீதிமன்றத்திடம் இருக்காது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரையை மறுக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கும். தமிழக திராவிட அரசியல் சில சட்ட எதிர்ப்பு (,எரிப்பு) தீர்மானங்கள் பரிந்துரைத்தது. நிர்வாக அரசு அதிகாரிகள் பரிந்துரையை அப்படியே ஏற்று, உயர் அமைப்பிற்கு அனுப்புகின்றன. உயர் அமைப்பு தமிழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X