பொது செய்தி

இந்தியா

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடந்தது. 29 போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 31 ஐ.பி.எல்., போட்டிகள், செப். 19ல் எமிரேட்சில் துவங்க உள்ளன.இந்நிலையில்,
ipl, bcci,

புதுடில்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடந்தது. 29 போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 31 ஐ.பி.எல்., போட்டிகள், செப். 19ல் எமிரேட்சில் துவங்க உள்ளன.


latest tamil news



இந்நிலையில், பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும். சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடும் முதல் போட்டியை பார்க்க நாளை முதல் www.iplt20.com மற்றும் platinumList.net என்ற இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ரசிகர்கள், கோவிட் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-செப்-202120:11:08 IST Report Abuse
Ramesh Sargam ஆக, கொரோனா மூன்றாவது அலையை வரவேற்க தயாராக உள்ளது ஐக்கிய அரபு எமிரேட்... போட்டிகளில் எந்த அணி கோப்பையை தட்டி செல்கிறதோ, தெரியாது. ஆனால், போட்டியின் முடிவில் இந்த கொரானா வைரஸ் கட்டாயம் வென்று முதலிடம் பிடிக்கும்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-செப்-202118:39:18 IST Report Abuse
Sanny கொரோனா மூன்றாவது அலைக்கு பிள்ளையார் சுழி போடுறாங்க. உசார்.
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
15-செப்-202118:02:13 IST Report Abuse
Mayavan Mayavan இதற்கு பெயர்தான் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X