அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: முதல்வர் அறிவுரை

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மாணவ செல்வங்களே மனம் தளராதீர்கள். கெஞ்சி கேட்டு கொள்கிறேன். ஈடில்லா உயிர்களை மாய்த்து கொள்ளாதீர்கள். கல் நெஞ்சங்கொண்டோரை கரைப்போம். நீட் எனும் அநீதியை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம்.மாணவி அனிதா உயிரிழந்த போது இருந்த மனநிலையில் தான் தற்போதும் உள்ளேன். மாணவர்களின் தற்கொலை செய்திகளை கேட்டு மனமுடைந்து போனேன். சிலர்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மாணவ செல்வங்களே மனம் தளராதீர்கள். கெஞ்சி கேட்டு கொள்கிறேன். ஈடில்லா உயிர்களை மாய்த்து கொள்ளாதீர்கள். கல் நெஞ்சங்கொண்டோரை கரைப்போம். நீட் எனும் அநீதியை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம்.
மாணவி அனிதா உயிரிழந்த போது இருந்த மனநிலையில் தான் தற்போதும் உள்ளேன். மாணவர்களின் தற்கொலை செய்திகளை கேட்டு மனமுடைந்து போனேன். சிலர் சுயலாபத்திற்காக நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதித்தனர். நீட் மசோதாவை செயல்படுத்த நிச்சயம் பாடுபடுவோம். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மாணவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். மாணவர்களால் முடியாதது எதுவும் இல்லை. நீட் மசோதாவை பல்வேறு மாநில அரசுகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X