பொது செய்தி

இந்தியா

தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: தொலைத்தொடர்புத் துறையில் 100 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(செப்.,15) நடந்தது. இந்த கூட்டத்தில், தொலைத்தொடர்பு துறையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரடி அந்நிய முதலீடு 49 சதவீதத்தை 100 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய முறைப்படி, துறை ரீதியாக அனுமதி
தொலைத்தொடர்பு, அந்நிய முதலீடு,மத்திய அமைச்சரவை, ஒப்புதல்

புதுடில்லி: தொலைத்தொடர்புத் துறையில் 100 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(செப்.,15) நடந்தது. இந்த கூட்டத்தில், தொலைத்தொடர்பு துறையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரடி அந்நிய முதலீடு 49 சதவீதத்தை 100 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய முறைப்படி, துறை ரீதியாக அனுமதி எதுவும் பெறாமல் நேரடியாக முதலீடுகளை செய்யும் வகையில் வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் சுலபமாகவும், வேகமாகவும் முதலீடுகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொண்டு வர முடியும் எனவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் புதிய வழிமுறையில் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். தொலைத்தொடர்பு துறையில் 9 வகையான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவை தொகையை செலுத்த 4 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வட்டி மற்றும் அபராதமும் குறைக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.


latest tamil news




டெலிகாம் பயனாளர்கள் தங்களது தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம். தொலைத்தொடர்பு பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்க ஆகும் செலவு குறைக்கப்படும். இது பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
16-செப்-202111:52:47 IST Report Abuse
வந்தியதேவன் செய்யுங்க... செய்யுங்க...? மொத்தமா இந்தியா..வை வித்துடலாம்னு முடிவு பண்ணிட்டீங்க? இப்படியே செய்யுங்க... இந்தியாவுல பிறந்த ஒருத்தன்கூட வியாபாரமோ, வணிகமோ செய்யக்கூடாது...ன்னு முடிவு பண்ணிட்டீங்க? இதைவிட மொத்தமா இந்தியாவை வித்துடலாமே? அப்பவே... ஒருத்தன் சொன்னான். இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்காதீங்கடா...ன்னு. ஏன்னா, சுதந்திரத்தை வச்சி காப்பாத்துற அளவுக்கு அவனுங்களுக்கு திறமையும், ஆற்றலும், அறிவும் இல்லென்னு. ஏன்னா, அடிமையாகவே பிறந்து, அடிமையாகவே வாழ்ந்தவனுக்கு திறமையும் ஆற்றலும் எங்கிருந்து வரும்? இதுக்கு ஏய்யா... லட்சக்கணக்கில் தியாகிகள் உயிர் தந்து, உடமை தந்து, அனைத்தையும் இழந்து சுதந்திரம் வாங்கிக் கொடுக்கணும்.... பேசமா வெள்ளைக்காரன்கிட்டே அடிமையாகவே இருந்திருக்கலாமே?
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
16-செப்-202109:08:49 IST Report Abuse
மதுரை விருமாண்டி இந்தியா ஃபார் சேல்.
Rate this:
Cancel
16-செப்-202107:49:15 IST Report Abuse
அப்புசாமி இனிமே தகவல் திருட்டு அது இதுன்னு கவலைப் பட வாணாம். அரசே சட்டபூர்வமா தகவலை எடுத்துக்கொள்ள அனுமதி குடுத்தாச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X