தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி: தொலைத்தொடர்புத் துறையில் 100 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(செப்.,15) நடந்தது. இந்த கூட்டத்தில், தொலைத்தொடர்பு துறையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரடி அந்நிய முதலீடு 49 சதவீதத்தை 100 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய முறைப்படி, துறை ரீதியாக அனுமதி
தொலைத்தொடர்பு, அந்நிய முதலீடு,மத்திய அமைச்சரவை, ஒப்புதல்

புதுடில்லி: தொலைத்தொடர்புத் துறையில் 100 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(செப்.,15) நடந்தது. இந்த கூட்டத்தில், தொலைத்தொடர்பு துறையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரடி அந்நிய முதலீடு 49 சதவீதத்தை 100 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய முறைப்படி, துறை ரீதியாக அனுமதி எதுவும் பெறாமல் நேரடியாக முதலீடுகளை செய்யும் வகையில் வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் சுலபமாகவும், வேகமாகவும் முதலீடுகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொண்டு வர முடியும் எனவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் புதிய வழிமுறையில் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். தொலைத்தொடர்பு துறையில் 9 வகையான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவை தொகையை செலுத்த 4 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வட்டி மற்றும் அபராதமும் குறைக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.


latest tamil news




டெலிகாம் பயனாளர்கள் தங்களது தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம். தொலைத்தொடர்பு பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்க ஆகும் செலவு குறைக்கப்படும். இது பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X