சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்ஹைட்ரஜன் சேகரிப்புஎதிர்கால போக்குவரத்தில் ைஹட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.ஹைட்ரஜன் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை. ஹைட்ரஜனை அதிக அழுத்தமுள்ள டேங்கில் 'கம்ப்ரஸ்டு' வாயுவாக சேகரித்து வைத்திருக்க வேண்டும் அல்லது மைனஸ் 253 டிகிரி செல்சியஸில் திரவநிலையில் வைத்திருக்க வேண்டும். இந்நிலையில்

அறிவியல் ஆயிரம்
ஹைட்ரஜன் சேகரிப்பு

எதிர்கால போக்குவரத்தில் ைஹட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.ஹைட்ரஜன் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை. ஹைட்ரஜனை அதிக அழுத்தமுள்ள டேங்கில் 'கம்ப்ரஸ்டு' வாயுவாக சேகரித்து வைத்திருக்க வேண்டும் அல்லது மைனஸ் 253 டிகிரி செல்சியஸில் திரவநிலையில் வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் ைஹட்ரஜனை சேகரித்து வைப்பதற்கு 'மெட்டல் ஹைட்ரைடு' என்ற மெட்டீரியலை வேதியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். தங்கம், வெள்ளி, காப்பர் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்
ஓசோன் தினம்

சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் வீரியத்தை தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். ஓசோன் படலத்தை பாதுகாக்க 1987 செப்.16ல் கனடாவின் மான்ட்ரியல் நகரில் 'மான்ட் ரியல் ஒப்பந்தம்' ஏற்பட்டது. இதை குறிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் 1987 முதல் செப்., 16ல் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'மான்ட்ரியல் ஒப்பந்தம் - நம்மை, நமது உணவு, தடுப்பூசியை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X