சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் நடந்து சென்ற தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம், செல்போன் வழிப்பறி

Added : செப் 15, 2021
Share
Advertisement
காங்கேயம்:வெள்ளகோவில் அருகே ரோட்டில் நடந்து சென்ற தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போன் பறித்து சென்றது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விக்ரம்,18, வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் ஒரு தனியார் மில்லில் தங்கி பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 2:00 மணிக்கு

காங்கேயம்:வெள்ளகோவில் அருகே ரோட்டில் நடந்து சென்ற தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போன் பறித்து சென்றது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விக்ரம்,18, வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் ஒரு தனியார் மில்லில் தங்கி பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 2:00 மணிக்கு சொந்த ஊர் செல்வதற்காக மில்லில் இருந்து கோவை கரூர் ரோடு, ஓலப்பாளையதில் பஸ் ஏறுவதற்காக, பச்சாபாளையம் பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் விக்ரமை மறித்து ஓலப்பாளையத்திற்கு வழி எது என்று பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் மர்மநபர் வைத்திருந்த கத்தியால் விக்ரரம தாக்கிவிட்டு, ரூ10 ஆயிரம் மற்றும் செல்போன் ஒன்றை பிடுங்கி கொண்டு மாயமாகினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விக்ரமை காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X