சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 15, 2021
Share
Advertisement
'புதிய தமிழகம், பா.ஜ., தவிர்த்து எந்த கட்சியும் அப்படி கூறவில்லை. அந்த கட்சிகள் தான், 'மாணவர்களின் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது' என்று பிரச்னையை திசை திருப்புகின்றன...' என, சொல்லத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: 'நீட்' தேர்வுக்காக குரல் கொடுக்கும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களில் ஒருவராவது,

பேச்சு, பேட்டி, அறிக்கை

'புதிய தமிழகம், பா.ஜ., தவிர்த்து எந்த கட்சியும் அப்படி கூறவில்லை. அந்த கட்சிகள் தான், 'மாணவர்களின் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது' என்று பிரச்னையை திசை திருப்புகின்றன...' என, சொல்லத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: 'நீட்' தேர்வுக்காக குரல் கொடுக்கும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களில் ஒருவராவது, மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில், 'தேர்வு பயத்திற்கோ, தோல்விக்கோ தீர்வு தற்கொலை இல்லை'னு சொல்லுறாங்களா பாருங்க...


'வித்தியாசமான கட்சி எனக் கூறப்படும் பா.ஜ., இன்னமும் பதாகையில் படம் வைப்பதைத் தான் முக்கியமாக கொண்டுள்ளதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா அறிக்கை:
கொரோனா தடுப்பூசியை முழுமையாக மத்திய அரசு இலவசமாக தருகிறது; ஆனால், தமிழகத்தில் நடக்கும் தடுப்பூசி முகாம்களில் பிரதமர் மோடி படம் இல்லை. மாறாக, தி.மு.க., கட்சி நிகழ்ச்சி போல, அதன் தலைவர்களின் பதாகைகள் வைக்கப்படுகின்றன.


'சிறுத்தைகளை போராட உத்தரவிட்டால், அவர்களின் குடும்பங்களை காப்பாற்ற வேலை பார்ப்பது யார்; இது அவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் இல்லையா...' என, கேட்கத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்தோர் என்னை சந்தித்து, வரும் 27ல் நடைபெற உள்ள போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டனர். எனவே நம் விடுதலை சிறுத்தைகள், அந்தந்த பகுதியில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.



'பிஞ்சுகளின் வேலை படிப்பது... கட்சிகளை நம்பாமல் இனிமேலாவது படிக்க, நீங்களாவது அறிவுறுத்தலாமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
ஆட்சி மாறியும், காட்சி மாறாத அவல நிலையாய், புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க., ஆட்சியிலும் 'நீட்' தேர்வுக்கு எதிராக பிஞ்சுகளின் மரணச் செய்தி தொடர்கதையாய் நீள்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது!



'அ.தி.மு.க., ஆட்சியின் போதும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. அதுபோலவே இந்த தீர்மானமும் அமையும்...' என, கூறத் துாண்டும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை:
அரசியலமைப்பு சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித் துறையில், மாநில நலனுக்காக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X