சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

சி.எம்.டி.ஏ., நிர்வாகம் உருப்பட ஒரு யோசனை!

Added : செப் 15, 2021
Share
Advertisement
சி.எம்.டி.ஏ., நிர்வாகம் உருப்பட ஒரு யோசனை!நாயர் தந்த லெமன் டீயை பருகியபடியே, ''குப்பையில கூட கொள்ளை அடிக்காங்கல்லா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''சென்னை, பல்லாவரம் தொகுதியில பம்மல் நகராட்சி இருக்கு... இங்க இருக்கிற 21 வார்டுகள்ல சேகரிக்கிற குப்பையை, விஸ்வேசபுரம் கிடங்குல கொட்டுதாவ... அது நிரம்புனதும்,


டீ கடை பெஞ்ச்


சி.எம்.டி.ஏ., நிர்வாகம் உருப்பட ஒரு யோசனை!



நாயர் தந்த லெமன் டீயை பருகியபடியே, ''குப்பையில கூட கொள்ளை அடிக்காங்கல்லா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''சென்னை, பல்லாவரம் தொகுதியில பம்மல் நகராட்சி இருக்கு... இங்க இருக்கிற 21 வார்டுகள்ல சேகரிக்கிற குப்பையை, விஸ்வேசபுரம் கிடங்குல கொட்டுதாவ... அது நிரம்புனதும், லாரிகள்ல ஏத்தி, கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு எடுத்துட்டு போறாவ வே...

''இதுக்காக, வாடகை லாரிகளுக்கு மாசா மாசம் பணம் குடுப்பாவ... அதுக்கு 'பில்' போடுற அதிகாரி, லாரிகள் கூடுதல் லோடு ஏத்திட்டு போனதா கள்ளக்கணக்கு எழுதி, லட்சக்கணக்குல ஆட்டையை போடுதாரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''நேத்து நீர்க்குமிழி படம் பார்த்தேன்... மேஜர் சுந்தர்ராஜன் என்னமா நடிச்சிருக்கார் தெரியுமோ...'' என்ற குப்பண்ணா, ''பாரபட்சம் பார்த்து 'டூட்டி' போடறா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார்.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''ஈரோடு, ஆனைக்கல் பாளையத்துல ஆயுதப்படை இருக்கு... இங்க இருக்கற ரெண்டு அதிகாரிகள், பெண் போலீசாருக்கு டூட்டி ஒதுக்கறதுல பாரபட்சமா செயல்படறா ஓய்... தங்களுக்கு வேண்டிய சிலருக்கு 'லைட் டூட்டி'யும், மத்தவாளுக்கு சிரமமான டூட்டியாகவும் போட்டு அனுப்பிடறா...

''அதே மாதிரி இங்க இருக்கற எஸ்.ஐ., ஒருத்தர், சில பெண் போலீசார் எந்த நேரத்துக்கு டூட்டிக்கு வந்தாலும், 'பிரசன்ட்' போட்டுடறார்... வேற பெண் போலீசார் லேட்டா வந்துட்டா மட்டும், 'பனிஷ்மென்ட்' தந்துடறார்... ஆயுதப்படை உயர் அதிகாரிகளும், பணி ஒதுக்கீடு, வருகை பதிவேடு விஷயங்கள்ல தலையிடாம இருக்கறதால, இந்த மூவர் அணி வச்சது தான் சட்டமா போயிடுத்து ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சுகவனேஸ்வரன், பிரபு, தனபால் சுந்தரம் வர்றாங்க... டீ போடுங்க நாயரே...'' என்ற அன்வர்பாய், ''சம்பளமே வாங்காம வேலைக்கு வர்றாங்க பா...'' எனக் கடைசி தகவலுக்கு மாறினார்.

''ஆச்சரியமா இருக்கே... யாருவே அது...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வுல, போன ஆட்சியில, 'எல்காட்' நிறுவன பரிந்துரைன்னு சொல்லி ஒப்பந்த பணியாளர்களா பலர் சேர்ந்தாங்க பா... இதுல பலர், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் சொந்த பந்தங்கள் தான்...

''கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணிக்குன்னு வந்த இவங்க, காலப்போக்குல கமிஷன் வாங்கி தர்ற தரகர்களா மாறிட்டாங்க... இப்ப, இவங்க இடத்துக்கு நிரந்தர பணியாளர்களை போட்டுட்டாங்க பா... தேர்தல் முடிஞ்சு புதுசா பொறுப்புக்கு வந்த அதிகாரிகள், ஒப்பந்த பணியாளர்களை நீட்டிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்க...

''ஆனாலும், சொந்த பந்தங்களை வீட்டுக்கு அனுப்ப மனசு வராத சில அதிகாரிகள் தயவுல, அவங்க பழையபடி ஆபீசுக்கு வந்து, கமிஷன் வசூலிக்கிற வேலைகளை பார்த்துட்டு இருக்காங்க... 'இவங்களை எல்லாம் வெளியேற்றினால் தான், சி.எம்.டி.ஏ., உருப்படும்'னு நேர்மையான அதிகாரிகள் சொல்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.அரட்டை முடிய, பெரியவர்கள் எழுந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X