அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் ஆணையருக்கு பழனிசாமி கடிதம்

Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'உள்ளாட்சி தேர்தலை, ஒரே கட்டமாக நடத்த வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாருக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவது தேவையற்றது. சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக

சென்னை:'உள்ளாட்சி தேர்தலை, ஒரே கட்டமாக நடத்த வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாருக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவது தேவையற்றது. சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். இரு கட்டமாக நடத்துவது, ஆளும் கட்சி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட வழிவகுக்கும்.

தேர்தல் பார்வையாளர்களாக, தமிழக அரசு ஊழியர்களை நியமிக்காமல், தமிழகத்திற்கு வெளியில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களை நியமிக்க வேண்டும்.அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். தேர்தல் பிரசாரத்தையும், வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை, 24 மணி நேரமும் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒன்பது மாவட்டங்களிலும், பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.தேர்தல் பாதுகாப்பு பணியில், துணை ராணுவத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

திறந்த வெளியில் நடக்கும் பிரசாரத்தில், 100 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக் கூடாது. உள்ளாட்சி தேர்தல், நேர்மையாக, வெளிப்படையாக நடக்க, அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
16-செப்-202111:54:20 IST Report Abuse
suresh kumar நீங்கள் ஆட்சியிலிருந்தபோது அவர்கள் வைத்த கோரிக்கைகளை, இப்போது அவர்கள் ஆட்சியிலிருக்கும் போது நீங்கள் வைக்கிறீர்கள் விளைவும் அதுபோலவே இருக்கும் என்று நம்பலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X