அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாணவர் தற்கொலையை தடுப்பது அரசின் கடமை'

Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'நீட் தேர்வால், எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை. அதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்'என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ், கனிமொழியை தொடர்ந்து சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டிருப்பது நிலைகுலையச் செய்துள்ளது.தமிழக மாணவர்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்வதெல்லாம்,

சென்னை:'நீட் தேர்வால், எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை. அதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்'என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ், கனிமொழியை தொடர்ந்து சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டிருப்பது நிலைகுலையச் செய்துள்ளது.தமிழக மாணவர்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்வதெல்லாம், 'நீட்' தேர்வுக்கு அஞ்சி, தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர் என்பதைத் தான்.நீட் தேர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

நீட் தேர்வால் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை. அதை அரசு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


21 பேருக்கு வீரவணக்கம்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:தமிழகத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வீழ்த்தப்பட்டுக் கிடந்த வன்னியர் சமுதாயத்திற்கு, சமூக நீதியை வென்றெடுப்பதற்காக, 34 ஆண்டுகளுக்கு முன் உரிமைப் போராட்டம் நடந்தது. அதில், 21 பேர்துப்பாக்கிகளால் சுடப்பட்டும், கொடூரமாக தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து, வரும் 17ம் தேதியுடன், 34 ஆண்டுகள் நிறைவடைய போகின்றன. சமூக நீதி வரலாற்றில், அவர்களின் தியாகம் ஈடு இணையற்றது; போற்றத்தக்கது. உயிர்த்தியாகம் செய்த 21 வீரத்தியாகிகளுக்கும் நான் வீரவணக்கம் செலுத்துகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
16-செப்-202111:58:49 IST Report Abuse
suresh kumar பெற்றோர்களின் அழுத்தத்தால்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இனி தற்கொலை செய்துகொள்ளும் மாணவனின் பெற்றோர்களுக்கு கடும் தெண்டனைகள் அறிவிக்கப் பட்டால், மாணவர் தற்கொலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X