தேர்தல் புகாருக்கு வசதியாக கட்டணமில்லாத தொலைபேசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் புகாருக்கு வசதியாக கட்டணமில்லாத தொலைபேசி

Added : செப் 15, 2021
Share
சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க வசதியாக, கட்டணமில்லாத தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஆணையத்தின் அறிக்கை:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி, 28

சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க வசதியாக, கட்டணமில்லாத தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆணையத்தின் அறிக்கை:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, 28 மாவட்டங்களில் பல்வேறு பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, அரசியல் கட்சிகள், பொதுமக்கள், வேட்பாளர்களிடம் இருந்து புகார்கள் வந்தால், அவற்றை பெற மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையம், விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் இயங்கும். பொதுமக்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை, 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய கட்டணமில்லாத தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X