ராஜ்யசபா இடைத்தேர்தல்மனு தாக்கல் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா இடைத்தேர்தல்மனு தாக்கல் துவக்கம்

Added : செப் 15, 2021
Share
சென்னை:தமிழகத்தில் காலியாக உள்ள, இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், துவங்கியது.அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர், எம்.எல்.ஏ.,வாக தேர்வானதால், கடந்த மே 7ல், தங்கள் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர்.வைத்திலிங்கம் வகித்த எம்.பி., பதவி காலம், 2022 ஜூன் 29ல் நிறைவடைகிறது. கே.பி.முனுசாமி

சென்னை:தமிழகத்தில் காலியாக உள்ள, இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், துவங்கியது.

அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர், எம்.எல்.ஏ.,வாக தேர்வானதால், கடந்த மே 7ல், தங்கள் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர்.வைத்திலிங்கம் வகித்த எம்.பி., பதவி காலம், 2022 ஜூன் 29ல் நிறைவடைகிறது. கே.பி.முனுசாமி வகித்த, எம்.பி., பதவி காலம், 2026 ஏப்., 2ல் நிறைவடைகிறது.எனவே, அவ்விரண்டு பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் துவங்கியது. முதல் நாளன்று, சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் மனு தாக்கல் செய்தார். 22ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.'வரும் 18ம் தேதி, அரசு விடுமுறை நாளாக இருந்தாலும், அன்று காலை 11:00 முதல் மாலை 3:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்' என, தேர்தல் நடத்தும் அதிகாரியான, சட்டசபை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்கள் 23ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற 27ம் தேதி கடைசி நாள். தி.மு.க., - எம்.எல்.ஏ., க்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X