பொது செய்தி

தமிழ்நாடு

சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்புக்கு கண்டனம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஈரோடு: 'சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு விவசாய விரோத போக்காகும்' என, விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது: உலகில் அதிக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மொத்த எண்ணெய் தேவையில், மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேஷியா,

ஈரோடு: 'சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு விவசாய விரோத போக்காகும்' என, விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது: உலகில் அதிக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மொத்த எண்ணெய் தேவையில், மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் ஒரு கிலோ பாமாயில், 60 ரூபாய்க்கு இறக்குமதி செய்கிறது. இதற்கு அரசு, 35 ரூபாய் மானியம் வழங்கி, 25 ரூபாய்க்கு மக்களுக்கு ரேஷனில் விற்கிறது. இதேநேரம், இந்தியாவில் விளையும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றுக்கு மானியம் வழங்குவதில்லை. ரேஷன் கடைகளிலும் வினியோகிக்க முன்வரவில்லை. இதற்கிடையில் இந்திய அரசு சமையல் எண்ணெய் மீதான இறக்குமதியை வரியை, 2.5 சதவீதமாக குறைத்துள்ளது. இச்செயல் விவசாய விரோதப்போக்காகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X