பொது செய்தி

தமிழ்நாடு

மாநகர உணவகங்களில் திடீர் சோதனை: 58 கிலோ உணவு பொருள் அழிப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், உணவகங்களில், ஆய்வு செய்த, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு, 58 கிலோ உணவு பொருளை அழித்தனர்.ஈரோட்டில் காந்திஜி சாலையில், ஆர்.ஆர்.பிரியாணி அன்ட் பார்ஸ்ட் புட் ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று காலை, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று சமைத்து பதப்படுத்தி, பிரிட்ஜில் வைத்திருந்த எட்டு கிலோ சிக்கன், மட்டன்

ஈரோடு: ஈரோட்டில், உணவகங்களில், ஆய்வு செய்த, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு, 58 கிலோ உணவு பொருளை அழித்தனர்.


ஈரோட்டில் காந்திஜி சாலையில், ஆர்.ஆர்.பிரியாணி அன்ட் பார்ஸ்ட் புட் ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று காலை, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று சமைத்து பதப்படுத்தி, பிரிட்ஜில் வைத்திருந்த எட்டு கிலோ சிக்கன், மட்டன் உள்ளிட்ட அசைவ வகைகள், ?? கிலோ அரிசி உணவு, அரைத்து வைத்த மசாலா பேஸ்ட், பிற அசைவ உணவு என, ?? கிலோ உணவு பொருளை கைப்பற்றினர். மதியத்துக்கு மேல், 17 உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சமைத்து பதப்படுத்திய உணவை மீண்டும் பயன்படுத்த வைத்திருந்த ஐந்து உணவகங்களுக்கு 'எச்சரிக்கை நோட்டீஸ்' வழங்கி, 40 கிலோ உணவை பறிமுதல் செய்து அழித்தனர். இதுகுறித்து அலுவலர் தங்க விக்னேஷ் கூறியதாவது: 'புரோசெர்வ்' சிக்கன் என்பதை மைனஸ், 18 முதல், 25 டிகிரியில் பதப்படுத்த வேண்டும். அவித்து மஞ்சள் தடவிய சிக்கன் உள்ளிட்ட அசைவத்தை, பூஜ்யம் முதல் ஐந்து டிகிரிக்குள் பதப்படுத்த வேண்டும். உணவை பிரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி உண்பது ஒரு சதவீதம் கூட நல்லதல்ல. இரண்டாவது முறை அதே தவறு நடந்தால், அபராதம் அல்லது சீல் நடவடிக்கை மேற்கொள்வோம். தவிர உணவில் கலர் சேர்க்க பல பொருட்கள் வைத்துள்ளனர். கெட்டுப்போன தயிர், மில்க் ?ஷக்கையும் அகற்றி உள்ளோம். மாநகர உணவகங்களில் தரமற்ற உணவு விற்பதாக தெரிந்தால், 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் மக்கள் புகார் தெரிவிக்கலாம். இன்றைய சோதனையில், 58 கிலோ உணவு பொருள் அழிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X