வட, தென் கொரிய நாடுகளின் ஏவுகணை சோதனையால் பதற்றம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சியோல்:நேற்று, வட கொரியா மற்றும் தென் கொரிய நாடுகள் போட்டி போட்டு, ஏவுகணை சோதனைகள் நடத்தியதால், கிழக்காசிய பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, சில தினங்களுக்கு முன், கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. 1,500 கி.மீ., துாரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் இந்த சோதனை வெற்றி பெற்றதாக வட கொரியா அறிவித்தது.இந்நிலையில்
 வட, தென் கொரிய நாடுகளின் ஏவுகணை சோதனையால் பதற்றம்

சியோல்:நேற்று, வட கொரியா மற்றும் தென் கொரிய நாடுகள் போட்டி போட்டு, ஏவுகணை சோதனைகள் நடத்தியதால், கிழக்காசிய பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, சில தினங்களுக்கு முன், கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. 1,500 கி.மீ., துாரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் இந்த சோதனை வெற்றி பெற்றதாக வட கொரியா அறிவித்தது.இந்நிலையில் நேற்றும், வட கொரியா, இரு முறை ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. இந்த ஏவுகணைகள், 800 கி.மீ., துாரம் சென்று இலக்கை தாக்கிய பின், கடலில் விழுந்தன. இதை, தென் கொரிய ராணுவம் 'ரேடார்' வாயிலாக கண்டுபிடித்தது.

இதையடுத்து வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், தென் கொரியாவும், ஏவுகணை சோதனை நடத்தியது. முதன் முறையாக, 3,000 டன் நீர்மூழ்கி கப்பலில் இருந்து குறுகிய துாரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணையை தென் கொரியா ஏவியது.இந்த ஏவுகணை குறித்த இலக்கை தாக்கி, கடலில் விழுந்ததை அடுத்து, சோதனை வெற்றி பெற்றதாக, தென் கொரியாஅறிவித்துள்ளது.

இப்படி வட கொரியாவும், தென் கொரியாவும் போட்டி போட்டு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது, கிழக்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X