பொது செய்தி

தமிழ்நாடு

பவானி ஆற்றில் உபரி நீர் 5,600 கனஅடி திறப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, 5,600 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 102 அடியாகவும், நீர் இருப்பு, 30.3 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. இதனால் நேற்று முன்தினம், 2,220 கன அடியாக இருந்த வரத்து, 5,830 கன அடியாக நேற்று காலை அதிகரித்தது.

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, 5,600 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 102 அடியாகவும், நீர் இருப்பு, 30.3 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. இதனால் நேற்று முன்தினம், 2,220 கன அடியாக இருந்த வரத்து, 5,830 கன அடியாக நேற்று காலை அதிகரித்தது. அக்டோபர் மாதம் வரை அணையில், ??? அடிக்கு மட்டுமே தண்ணீரை தேக்க முடியும் என்பதால், அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி பவானி ஆற்றில், 5,600 கன அடி தண்ணீர் உபரி நீர் திறக்கப்பட்டது.


தடுப்பணையில் வெள்ளம்: பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பால், கொடிவேரி தடுப்பணைக்குள் நுழைய, குளிக்க கடந்த, ?ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 4,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வந்ததால், கொடிவேரி தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. அப்பகுதி பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X