சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டட தொழிலாளி கொலை: மேலும் இரண்டு பேர் கைது

Added : செப் 15, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் அருகே செல்லப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன், 55, கட்டட தொழிலாளி. இவரின் மனைவி மல்லிகா, 50, மகன் செந்தில்குமார், 35. கணவரை பிரிந்து வாழ்ந்த சசிகலா, 48, என்பவரை அர்ஜுனன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலத்தை சசிகலாவுக்கு எழுதி வைப்பதாக அர்ஜுனன் கூறினார். இதனால் ஆத்திரத்தில் இருந்த மகன் செந்தில்குமார், சில

அந்தியூர்: அந்தியூர் அருகே செல்லப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன், 55, கட்டட தொழிலாளி. இவரின் மனைவி மல்லிகா, 50, மகன் செந்தில்குமார், 35. கணவரை பிரிந்து வாழ்ந்த சசிகலா, 48, என்பவரை அர்ஜுனன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலத்தை சசிகலாவுக்கு எழுதி வைப்பதாக அர்ஜுனன் கூறினார். இதனால் ஆத்திரத்தில் இருந்த மகன் செந்தில்குமார், சில நாட்களுக்கு முன், தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்றார். தலைமறைவான நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் செந்தில்குமார் நேற்று முன்தினம் சரணடைந்தார். இதனிடையே கொலை சம்பவத்தில் செந்தில்குமாருக்கு, அவரின் மைத்துனரான திருச்சி, மண்ணச்சநல்லூரை சேர்ந்த விமல்ராஜ், 36; அதே பகுதியை சேர்ந்த சரவணன், 41; உதவியாக இருந்தனர். இருவரையும் ஆப்பக்கூடல் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X