சோனு சூட் இடங்களில் வருமான வரி சோதனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சோனு சூட் இடங்களில் வருமான வரி சோதனை

Added : செப் 15, 2021
Share
மும்பை:மும்பை மற்றும் லக்னோவில், நடிகர் சோனு சூட் உடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், 48. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மும்பை உட்பட பல இடங்களில் தவித்த புலம்பெயர்

மும்பை:மும்பை மற்றும் லக்னோவில், நடிகர் சோனு சூட் உடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், 48. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மும்பை உட்பட பல இடங்களில் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவினார்.

இதன் வாயிலாக தேசிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.இந்நிலையில், மும்பை மற்றும் லக்னோவில் சோனு சூட் உடன் தொடர்புடைய ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். 'ரியல் எஸ்டேட்' தொழில் ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X