பொது செய்தி

தமிழ்நாடு

35 உள்ளாட்சி பதவிக்கு தேர்தல்: இன்று மனுதாக்கல் ஆரம்பம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள, 35 பதவிகளுக்கு, அக்.,6ல், ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாவட்ட ஊராட்சி (50 ஆயிரம் ஓட்டு) உறுப்பினர், 10 வது வார்டு, ஒன்றியக்குழு (5 ஆயிரம் ஓட்டு) உறுப்பினர், 9 வது வார்டுக்கு தேர்தல் நடக்கிறது. அதேபோல, 10 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 23 இடம் என, மொத்தம், 35 பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான மனுதாக்கல்

சேலம்: சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள, 35 பதவிகளுக்கு, அக்.,6ல், ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாவட்ட ஊராட்சி (50 ஆயிரம் ஓட்டு) உறுப்பினர், 10 வது வார்டு, ஒன்றியக்குழு (5 ஆயிரம் ஓட்டு) உறுப்பினர், 9 வது வார்டுக்கு தேர்தல் நடக்கிறது. அதேபோல, 10 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 23 இடம் என, மொத்தம், 35 பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான மனுதாக்கல் இன்று, துவங்கி வரும், ?? வரை நடக்கிறது. சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மனுக்களை பெறுவர். காலை, 10:00 மணிக்கு துவங்கி மாலை, 5:00 மணிவரை மனுதாக்கல் நடைபெறும். 25ல், மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு, அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அக்.,6ல், காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை, 6:00 மணி வரை நடைபெறும். 12ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கார்மேகம் தலைமையில், உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், சட்டம் - ஒழுங்கு, துணை ஆணையர் மோகன்ராஜ், மேட்டூர் ஆர்.டி.ஓ., உள்பட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X