அரசு விதை பண்ணையில் தயார் நிலையில் நாற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு விதை பண்ணையில் தயார் நிலையில் நாற்று

Added : செப் 15, 2021
Share
ஓமலூர்: பாரம்பரிய நெல் பயிரிட, அரசு விதைப்பண்ணையில், நாற்று தயாராகி வருகிறது. காடையாம்பட்டி தாலுகா, டேனிஷ்பேட்டையில் அரசு விதைப்பண்ணை உள்ளது. அதில், நடப்பாண்டு வெள்ளை பொன்னி, டி.கே.எம் - 13, ஏ.டி.டி.ஆர் - 45, கோ - 51, வி.ஜி.டி- 1, கோ - 6 ஆகிய ரகங்கள், 68 ஏக்கரில் நடவு பணி நடந்து வருகிறது. அதனுடன், தமிழக அரசு பாரம்பரிய ரக நெல்களை உற்பத்தி செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மூன்று ஏக்கரில்

ஓமலூர்: பாரம்பரிய நெல் பயிரிட, அரசு விதைப்பண்ணையில், நாற்று தயாராகி வருகிறது. காடையாம்பட்டி தாலுகா, டேனிஷ்பேட்டையில் அரசு விதைப்பண்ணை உள்ளது. அதில், நடப்பாண்டு வெள்ளை பொன்னி, டி.கே.எம் - 13, ஏ.டி.டி.ஆர் - 45, கோ - 51, வி.ஜி.டி- 1, கோ - 6 ஆகிய ரகங்கள், 68 ஏக்கரில் நடவு பணி நடந்து வருகிறது. அதனுடன், தமிழக அரசு பாரம்பரிய ரக நெல்களை உற்பத்தி செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மூன்று ஏக்கரில் கறுப்பு கவுனி, இரண்டு ஏக்கரில் சீரக சம்பா விதைக்கு நாற்று விடப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு முன் விதைக்கப்பட்ட, கறுப்பு கவுனி நாற்று தற்போது பச்சை பசேலென்று கண்கொள்ளா காட்சியாக உள்ளது. நேற்று முன்தினம், சீரக சம்பா நாற்று விடும் பணி துவங்கியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X