டி.எஸ்.பி., அலுவலகத்தில் சேலம் டி.ஐ.ஜி., ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பி., அலுவலகத்தில் சேலம் டி.ஐ.ஜி., ஆய்வு

Added : செப் 15, 2021
Share
சங்ககிரி: சங்ககிரி டி.எஸ்.பி., அலுவலகத்தில், சேலம் சரக டி.ஐ.ஜி., மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், சங்ககிரி, தேவூர், இடைப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம், மகுடஞ் சாவடி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்கள், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள்,

சங்ககிரி: சங்ககிரி டி.எஸ்.பி., அலுவலகத்தில், சேலம் சரக டி.ஐ.ஜி., மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், சங்ககிரி, தேவூர், இடைப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம், மகுடஞ் சாவடி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்கள், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டியவர்களின் விபரங்கள் குறித்த கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும், சங்ககிரி உட்கோட்ட பகுதிகளில் உள்ள போலீசாருக்கு, கட்டப்பட வேண்டிய குடியிருப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். சங்ககிரி டி.எஸ்.பி., நல்லசிவம் உடனிருந்தார். முன்னதாக, டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மரக்கன்றை டி.ஐ.ஜி., மகேஸ்வரி நட்டு வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X