பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர் டவுன் போலீசில் இரு காதல் ஜோடி தஞ்சம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் டவுன் போலீசில், இரு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது. ஆத்தூர், கோட்டையை சேர்ந்த முருகேசன் மகன் ஞானசேகர், 26, கூலி தொழிலாளி. மந்தைவெளியை சேர்ந்த தர்மர் மகள் காயத்ரி, 26. பட்டதாரி. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம், பேளூர் தான்தோன்றீஸ்வரர்

ஆத்தூர்: ஆத்தூர் டவுன் போலீசில், இரு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது. ஆத்தூர், கோட்டையை சேர்ந்த முருகேசன் மகன் ஞானசேகர், 26, கூலி தொழிலாளி. மந்தைவெளியை சேர்ந்த தர்மர் மகள் காயத்ரி, 26. பட்டதாரி. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், ஞானசேகர், காயத்ரி திருமணம் செய்து கொண்டனர். நேற்று, பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் டவுன் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும் அழைத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஞானசேகரின் பெற்றோர் வரமறுத்ததால், காயத்ரியுடன் ஞானசேகரை அனுப்பி வைத்தனர்.

* ஆத்தூர், முல்லைவாடியை சேர்ந்த அசோக் மகன் அரவிந்த், 22, பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகள் சந்தியா, 20, ஆத்தூர் அரசு கல்லூரியில், பி.எஸ்சி., கணிதம், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர். இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று முன்தினம், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்துள்ளனர். நேற்று, பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும் அழைத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டதால், காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X