'பிரேத பரிசோதனை அறிக்கை மட்டும் குற்றவாளி என தீர்ப்பளிக்க போதாது'

Added : செப் 15, 2021
Share
Advertisement
புதுடில்லி:மனைவி கொலை வழக்கில், சந்தர்ப்ப சாட்சியங்கள் சரி இல்லாததால், கணவருக்கு விதித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2011ல், பீஹாரைச் சேர்ந்த நாகேந்திர ஷாவின் மனைவி, தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மூச்சுத் திணறல்பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு, மூச்சுத் திணறி இறந்ததாக

புதுடில்லி:மனைவி கொலை வழக்கில், சந்தர்ப்ப சாட்சியங்கள் சரி இல்லாததால், கணவருக்கு விதித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2011ல், பீஹாரைச் சேர்ந்த நாகேந்திர ஷாவின் மனைவி, தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மூச்சுத் திணறல்பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு, மூச்சுத் திணறி இறந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நாகேந்திர ஷாவுக்கு, செஷன்ஸ் நீதிமன்றம் அபராதமுடன் ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, பாட்னா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து நாகேந்திர ஷா, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்து, தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:பிரேத பரிசோதனை அறிக்கை, 2011 நவ., 18ல் கிடைத்து உள்ளது. ஆனால் போலீசார், 2012 ஆக., 25ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்த தாமதத்திற்கு விளக்கம் தெரிவிக்கவில்லை. ஆயுள் தண்டனை ரத்துமனுதாரருக்கும், அவர் மனைவிக்கும் இடையே தகராறு இருந்ததாக அரசு தரப்பு சாட்சியங்கள் தெரிவிக்கவில்லை; அதற்கான ஆதாரங்களையும், அரசு தரப்பு தாக்கல் செய்யவில்லை.

வெறும் பிரேத பரிசோதனை அறிக்கையை மட்டும் வைத்து, மனுதாரரை குற்றவாளி என முடிவு செய்ய முடியாது. எனவே, கீழமை நீதிமன்றம் மனுதாரருக்கு அளித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X