சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவர், அரசு ஊழியர் இடையே தகராறு

Added : செப் 15, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: ஊராட்சி தலைவர் மற்றும் அரசு ஊழியர் இடையே தகராறு ஏற்பட்டது. கெங்கவல்லி அருகே, வலசக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா, 51. இவர், கெங்கவல்லி அரசு பள்ளி விடுதியில் காவலாளியாக பணிபுரிகிறார். இவர் அரசு தொகுப்பு வீடு கட்டுவதற்கு மனு செய்துள்ளார். இவர், அரசு பணியில் உள்ளதால் தொகுப்பு வீடு கட்டுவதற்கான மனுவை, கெங்கவல்லி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தள்ளுபடி

கெங்கவல்லி: ஊராட்சி தலைவர் மற்றும் அரசு ஊழியர் இடையே தகராறு ஏற்பட்டது. கெங்கவல்லி அருகே, வலசக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா, 51. இவர், கெங்கவல்லி அரசு பள்ளி விடுதியில் காவலாளியாக பணிபுரிகிறார். இவர் அரசு தொகுப்பு வீடு கட்டுவதற்கு மனு செய்துள்ளார். இவர், அரசு பணியில் உள்ளதால் தொகுப்பு வீடு கட்டுவதற்கான மனுவை, கெங்கவல்லி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தள்ளுபடி செய்தனர். அதன்பின், சொந்தமாக வீடு கட்டிய நிலையில், பொது குடிநீர் குழாயில் தனியாக வீட்டிற்கு குழாய் அமைத்துள்ளார். அதையறிந்த, 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் பெருமாள், ஊராட்சி செயலர் சோலைமுத்து ஆகியோர் இது குறித்து கேட்டுள்ளனர். பின், குழாயை அகற்றும் பணியின்போது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஊராட்சி தலைவர் பெருமாள், அரசு ஊழியர் கண்ணையா ஆகியோர், கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X