பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
பாலக்கோடு: பாலக்கோட்டில், சமூக பாதுகாப்புத்துறை சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் தாசில்தார் அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதில், குழந்தைகள் பாதுகாப்பு என்பது குழந்தை பிறந்ததிலிருந்து இளம் பருவம், 18 வயது முடியும் வரையிலாகும். அக்குழந்தைக்கு குடும்ப உறவை மேம்பட்ட நிலையை ஏற்படுத்தி, குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல், சிசு கொலை, இளவயது

பாலக்கோடு: பாலக்கோட்டில், சமூக பாதுகாப்புத்துறை சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் தாசில்தார் அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதில், குழந்தைகள் பாதுகாப்பு என்பது குழந்தை பிறந்ததிலிருந்து இளம் பருவம், 18 வயது முடியும் வரையிலாகும். அக்குழந்தைக்கு குடும்ப உறவை மேம்பட்ட நிலையை ஏற்படுத்தி, குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல், சிசு கொலை, இளவயது திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர், குழந்தை கடத்தல் ஆகிய தீமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட ஓட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிக்கும், அந்தந்த கிராம வட்டார அளவிலான பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தி, உடனடியாக அரசுக்கு தகவல் தர வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், வி.ஏ.ஓ.,கள், ஊராட்சி செயலாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X